டாஸ்மார்க் கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனைக்கு தடை

வயது சந்தேகம் ஏற்பட்டால் ஆதார், ஓட்டுநர் உரிமம் சரிபார்க்க உத்தரவு

1 மணி நேரத்திற்கு முன்
டாஸ்மார்க் கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனைக்கு தடை

டாஸ்மார்க் கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை காட்டச் சொல்லி உறுதி செய்யவும் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படாத நேரங்களிலும் மது விற்பனை நடைபெறுவதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...