தமிழ்நாட்டில் கோடைவெப்பம் அதிகரிப்பு: சென்னையில் 100°F வரை பதிவாகும்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2 மணி நேரத்திற்கு முன்
தமிழ்நாட்டில் கோடைவெப்பம் அதிகரிப்பு: சென்னையில் 100°F வரை பதிவாகும்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கடும் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்பு உள்ளது.

மேலும், அதிக வெப்பத்துடன் கூடிய உயர்ந்த ஈரப்பதம் காரணமாக மக்களுக்கு மேலும் அசௌகரியம் ஏற்படக்கூடும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்திய அளவில்,

தேசிய அளவில், மகாராஷ்டிராவின் அகோலா நகரில் 116 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி, நாட்டிலேயே அதிகபட்சமாக உள்ளது. மேலும்,ராஜஸ்தான் மாநிலத்தின் மார்பர் பகுதியில் வெப்ப அலை நிலவி மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

இதனிடையே, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...