தமிழ்நாடு அரசு சார்பில் பெண்கள் பாதுகாப்பான பாதுகாப்புக்கான அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு பாதுகாப்பு படைக்கு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் பதவியேற்ற நாளில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுட்டு சிங்கப்பெண்கள் சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்படும் என அதிரடியாக அறிவித்தார். மேலும் அந்த துறையை தானே நேரடியாக கண்காணிக்க உள்ளதாகவும் முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இந்த நிலையில் சிங்கப்பெண் சிறப்பு பாதுகாப்பு படைக்கு ஐஜியாக பவானீஸ்வரி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
யார் இந்த பவானீஸ்வரி?
தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானீஸ்வரி 2002 ஆம் ஆண்டு பேட்சை சார்ந்தவர். தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநராக அதாவது டிஜிபியாக இருந்த அவர் தற்போது ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். பவானீஸ்வரி கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறையின் கீழ் கீழ்பாக்கம் சரகத்தில் துணை கமிஷனராக திறம்பட செயல்பட்டுள்ளார்.
தொடர்ந்து சென்னை போக்குவரத்து காவல்துறையில் இணை கமிஷனராகவும், அதன்பின்னர் பதவி உயர்வு பெற்று திருச்சி சரகத்தில் டிஐஜியாகவும் பணியாற்றியுள்ளார். மேலும் கருணாநிதி,ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகிய 4 முன்னாள் முதலமைச்சர்களுடன் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர் பவானீஸ்வரி.
24 ஆண்டுகளாக காவல்துறையில் தவிர்க்க முடியாத ஒரு அதிகாரியாக திகழ்ந்து வரும் அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு கோவையில் தலையிடமாகக் கொண்ட மேற்கு மண்டல காவல் துறையின் ஐஜி பதவிக்கு நியமிக்கப்பட்டார். இதன் மூலம் 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மேற்கு மண்டல காவல்துறையின் முதல் பெண் ஐஜி என்ற பெருமையை அவர் பெற்றார்.
இதற்கிடையில் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் ஐஜியாக பதவி வகித்துள்ளார். இந்த நிலையில் தான் சிங்கப்பெண்கள் பாதுகாப்பு படையின் ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜயே அவரை தேர்வு செய்ய விருப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டின் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு கூடுதலாக அவருக்கு உருவாகியுள்ளது. சவால் நிறைந்த இந்த பணியில் மிகச் சிறப்பாக பவானீஸ்வரி பணியாற்றுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக குடியரசுத் தலைவரின் சிறந்த சேவைக்கான காவலர் பதக்கம், தகுதியான சேவைக்கான காவல் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். மாநிலத்தின் தலையாய பிரச்னையாக கருதப்படும் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து ஒரு முன்மாதிரியான மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற பவானீஸ்வரி பங்களிப்பார் என பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
