மாநிலங்களவையில் காலியாக உள்ள தமிழகத்திற்கான ஒரு இடத்தை தமிழக வெற்றி கழகம் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற அதில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. இதனிடையே திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியில் தேர்தலுக்குப் பின்னர் இணைந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழக அமைச்சரவையில் இரண்டு இடங்களையும் பெற்றுக் கொண்டது. இதனிடையே சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் திமுகவுடன் தொகுதி பங்கீடு செய்யும் போது காலியாக இருந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் பெற்றுக் கொண்டது.
இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி.சண்முகம் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் அவர் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த நிலையில் காலியாக உள்ள தமிழகத்துக்கான ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 18ஆம் தேதி நடைபெற உள்ளது.
மக்களவை வாய்ப்பை மறுத்த விஜய்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அடிப்படையில் இந்த மாநிலங்களவை இடம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைத்தது. இதனால் தமிழ்நாடு சட்டமன்றத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் கால் பதிக்கும் வாய்ப்பு விஜய்க்கு கிடைத்தது. அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அந்த ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்குவதாக தடாலடியாக அறிவித்தார். இதன் பின்னணியில் விஜயின் மாஸ்டர் பிளான் இருப்பது தெரியவந்துள்ளது.
தவெக போடும் மாஸ்டர் பிளான்
அதாவது தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகிவிட்டது. தேசிய அளவில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்க தமிழக வெற்றிக் கழகம் விரும்புகிறது. ஆனால் அந்த கூட்டணியில் திமுகவும் இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது. இதனால் சில காலம் கழித்து அந்த கூட்டணியில் இணைய தவெக முடிவெடுத்துள்ளது.
அதேசமயம் 6 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட மக்களவை உறுப்பினர் பதவியில் சி.வி.சண்முகம் ஏற்கனவே 4 ஆண்டு காலம் பதவி வகித்து விட்டதால் அடுத்த இரண்டு ஆண்டு காலத்திற்கு மட்டுமே இந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி செல்லுபடியாகும். அதனால் முழுவதுமாக பதவி காலம் கிடைக்கும் அடுத்த வாய்ப்பில் அதிக அளவிலான எம்பிக்களை மாநிலங்களவைக்கு அனுப்பலாம் என விஜய் திட்டமிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் டெல்லியில் குரல் கொடுக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸின் ஆதரவு தேவை என்பதையும் விஜய் உணர்ந்துள்ளார். 2028 ஆம் ஆண்டு காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு குறைந்தபட்சம் மூன்று பேரை தமிழக வெற்றி கழகம் அனுப்ப முடியும். மேலும் காங்கிரஸை அமைச்சரவையில் சேர்த்ததை மத்திய பாஜக தலைமை விரும்பவில்லை. அதனால் மக்களவைக்கு தங்கள் கட்சி எம்.பி.,யை அனுப்பி மேலும் கோபத்தை சம்பாதிக்க விஜய் தயக்கம் கொண்டே காங்கிரஸூக்கு அதனை ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
