Rajinikanth On Vijay | பாயிண்டை பிடித்த ரஜினி.. விஜய்க்கு சப்போர்ட்.. தவெக தொண்டர்களுக்கு அட்வைஸ்!

விஜய்க்கு ஆபத்து எதிரில் இருப்பதை விட அவரது ஆதரவாளர்கள் செய்யும் செயல்களின் விளைவுகளால் அதிகம் இருப்பதை ரஜினி சரியாக கணித்திருக்கிறார் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

G

எழுதியவர்

2 மணி நேரத்திற்கு முன்
Rajinikanth On Vijay | பாயிண்டை பிடித்த ரஜினி.. விஜய்க்கு சப்போர்ட்.. தவெக தொண்டர்களுக்கு அட்வைஸ்!

தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய் மீது எனக்கு எந்தவித பொறாமையும் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனம் முடிவுக்கு வந்துள்ளது என சொல்லப்படுகிறது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி கட்டிலிலில் அமர்ந்துள்ளது. விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். பதவியேற்று ஒருவாரம் முடிந்துள்ள நிலையில் விஜய் மீதும், தவெக அரசு மீதும் பல விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. இதனிடையே விஜய் முதலமைச்சரானதில் ரஜினிகாந்துக்கு உடன்பாடில்லை என்ற விஷயம் தொடர்ச்சியாக விவாதிக்கப்படுகிறது.

காரணம் விஜய் முதலமைச்சராக மிகப்பெரிய இழுபறி நீடித்தது. இந்த சமயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ரஜினிகாந்த் சந்தித்தார். அன்று மாலை அதிமுக ஆட்சியமைக்க உள்ளதாகவும், திமுக வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ரஜினி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவையும் சந்தித்து பேசியதால் இந்த கூட்டணி பேச்சு ரஜினிகாந்த் தான் மத்தியஸ்தர் என சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றம்சாட்ட தொடங்கினர். அதுமட்டுமல்லாமல் விமான நிலையம் வந்த ரஜினியிடம் விஜய் பற்றிய கேள்வியை பத்திரிக்கையாளர் ஒருவர் முன்வைக்க அவர் பதிலேதும் தெரிவிக்காமல் கையெடுத்துக் கும்பிட்டதும் சர்ச்சையானது. இப்படி அடுக்கடுக்கான விமர்சனங்கள் ரஜினி மீது வைக்கப்பட்ட நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, மு.க.ஸ்டாலின் தோற்றது தனக்கு வருத்தம் எனவும், விஜய் முதலமைச்சரானதில் ஆச்சரியம் கலந்த சந்தோஷம் உண்டானது என்றும் ரஜினி கூறினார். மேலும் ஸ்டாலின் 40 ஆண்டுகால நண்பர் என்பதால் தேர்தல் தோல்விக்குப் பின் அவரை சந்தித்தேன். அதிமுக, திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நான் நடத்தியதாக சொல்லப்படுகிறது. அதில் உண்மையில்லை. அந்த அளவிற்கு ரஜினி தரங்கெட்டு போகவில்லை எனவும் பதிலடி கொடுத்தார்.

அதேசமயம் விஜய்க்கும் எனக்கும் ஒரு தலைமுறை இடைவெளி உள்ளது. எங்கள் இருவரையும் ஒப்பீடு செய்வது இருவருக்கும் நல்லது கிடையாது. எம்ஜிஆர், என்.டி.ஆரை விட விஜய் பெரிய சாதனை படுத்தியுள்ளார். மத்தியில் பாஜக, இங்கு இரு பெரிய கட்சிகளையும் எதிர்த்து பெரிய ஆளாக சாதித்துள்ளார். அவருக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் மீது மக்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதனை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன் எனவும் ரஜினிகாந்த் கூறினார்.

அப்போது விஜய்க்கு என்ன அறிவுரை சொல்ல நினைக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “விஜயை மக்களாகிய நாம் 2 ஆண்டுகள் அப்படியே விட வேண்டும். அதேசமயம் அவரது தொண்டர்கள், ரசிகர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் என்ன செய்தாலும் அது முதலமைச்சர் விஜயை தான் பாதிக்கும் என்பதை புரிய வேண்டும்” என தெரிவித்தார். இந்த நிலையில் விஜய்க்கு ஆபத்து எதிரில் இருப்பதை விட அவரது ஆதரவாளர்கள் செய்யும் செயல்களின் விளைவுகளால் அதிகம் இருப்பதை ரஜினி சரியாக கணித்திருக்கிறார் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...