Chennai Parandur Airport | கைவிடப்படும் பரந்தூர் விமான நிலைய திட்டம்.. முதல்வர் விஜய்க்கு பறந்த கோரிக்கை!

பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையத்துடன் இதனை ஒப்பிடுகிறார்கள். பெங்களூரு கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் இருக்கக்கூடிய நகரம். ஆனால் சென்னை மூன்றடி உயரத்தில் இருக்கக்கூடிய நகரமாக உள்ளது.

G

எழுதியவர்

1 நாட்களுக்கு முன்
Chennai Parandur Airport | கைவிடப்படும் பரந்தூர் விமான நிலைய திட்டம்.. முதல்வர் விஜய்க்கு பறந்த கோரிக்கை!

பரந்தூர் விமான நிலைய திட்டத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதற்கு பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தை முதலமைச்சர் விஜய் முழுவதுமாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலையம்

சென்னையில் உள்ள மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்தது. இதற்கு பரந்தூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று தமிழக வெற்றிக் கழகம் பதவியேற்றுள்ளது. இந்த சூழலில் பரந்தூர் விமான நிலையத்தின் பூர்வாங்கப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்திட்டத்திற்குப் பதிலாக அப்பகுதியில் தொழிற்பூங்கா அமைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வரவேற்பு

அதே சமயம் இந்த தகவல் குறித்து பேசியுள்ள பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், "பரந்தூர் விமான நிலையம் என்பது தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் எதிராக அமைந்திருந்தது. அது வந்திருந்தால் சென்னையே மிகப்பெரிய சீரழிவில் சிக்கி இருக்கும். சென்னையை நிரந்தரம் வெள்ளம் சூழ் நகரமாக மாற்றி அமைத்திருக்கும். இப்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் தனது முதல் அரசியல் பயணமாக பரந்தூர் சென்று நான் வந்தால் நிச்சயமாக இந்த திட்டத்தை கைவிடுவேன் என தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் பரந்தோர் விமான நிலைய திட்டத்தை கைவிடும்படியான தகவல்கள் வெளியாகியுள்ளது. நாங்கள் முதலமைச்சரிடம் நிரந்தரமாக இந்த திட்டத்தை கைவிடும் கோரிக்கையை முன்வைக்கிறோம்.

திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்

பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையத்துடன் இதனை ஒப்பிடுகிறார்கள். பெங்களூரு கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் இருக்கக்கூடிய நகரம். ஆனால் சென்னை மூன்றடி உயரத்தில் இருக்கக்கூடிய நகரமாக உள்ளது. சென்னைக்கு காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து மழை வெள்ளநீர் வருகிறது. அதனை ஆங்காங்கே தடுத்து நிறுத்த வேண்டும் என்றால், சென்னை வெள்ளம் சூழ்நகரமாக மாற வேண்டாம் என்றால் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும். ஒரு விமான நிலையம் வந்தால் அதனை சுற்றி ஷாப்பிங் மால்கள் தொடங்கி பல்வேறு விஷயங்கள் வந்துவிடும்.

இதனால் நீர்நிலைகள் அளிக்கப்படும் சூழல் உருவாகும். அதனால் முதலமைச்சரின் விஜய் பரந்தோர் விமான நிலைய திட்டத்தை முழுவதுமாக கைவிட நடவடிக்கை எடுப்பார் என பூவுலகின் நண்பர்கள் இயக்கம் நம்புவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...