திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்... ஆரத் தழுவி வரவேற்றார் முதல்வர்

மூன்று முறை தமிழக முதல்வராகப் பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இணைவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு முற்றுப்புள்ளி வைத்த நிலையில், இன்று தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

M

எழுதியவர்

2 மாதங்களுக்கு முன்
திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்... ஆரத் தழுவி வரவேற்றார் முதல்வர்

பல ஆண்டுகளாக அதிமுகவில் பயணித்த ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில்‌ அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் தான் ஓ. பன்னீர்செல்வம். அதன் பிறகு அதிமுகவில் இணைவதற்கு ஓ. பன்னீர்செல்வம் பலமுறை முயற்சித்தும், அவரை இணைத்துக் கொள்வதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் எந்த சூழலிலும் தனியாக கட்சி தொடங்க மாட்டேன் என்று அவர் தெரிவித்திருந்தார். சட்டசபையின் கடைசி நாளில் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி சிறப்பாக இருப்பதாக வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதனைத் தொடர்ந்து இந்து தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் உரிய ஆவணங்களுடன் திமுக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரண்டு முறை சிறை சென்ற நேரங்களிலும் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பும் ஓபிஎஸ் முதல்வராக இருந்துள்ளார். மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ், இன்று தனது மகன் ரவீந்திரநாத், உசிலம்பட்டி ஐயப்பன் ஆகியோருடன் அதிமுகவில் இணைந்து இருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...