நீலகிரியில் காட்டுத் தீ – 100 ஏக்கர் வனப்பரப்பு சேதம், போக்குவரத்து தடை

நீலகிரி மாவட்டத்தில் கடும் வெப்பத்தினால் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது

2 மணி நேரத்திற்கு முன்
நீலகிரியில் காட்டுத் தீ – 100 ஏக்கர் வனப்பரப்பு சேதம், போக்குவரத்து தடை

நீலகிரி மாவட்டம் மசனகுடி அருகே மரவக்கண்டி அணை மற்றும் நீர் மின் நிலையம் சுற்றுவட்டாரங்களில் ஏற்பட்ட தீ வேகமாக பரவி வருகிறது.

குன்னூர், மசனகுடி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான வனப்பரப்புகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரிய வகை தாவரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் தீயில் அழிந்து வருகின்றன.

காய்ந்த மூங்கில்கள் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறை கருதுகிறது.

தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மசனகுடி – சிங்காரா இடையிலான வாகன போக்குவரத்து இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...