Nambikkai Global Launch: நம்பிக்கை விதைக்கப்பட்ட நாள் இன்று - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

"உள்ளதை உள்ளபடி சொல்லுங்கள்"; நம்பிக்கை உலகளாவிய தொடக்க விழாவில், ஊடகத்திற்கு அட்வைஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

M

எழுதியவர்

3 மாதங்களுக்கு முன்
Nambikkai Global Launch: நம்பிக்கை விதைக்கப்பட்ட நாள் இன்று - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னையில் நடைபெற்ற நம்பிக்கை உலகளாவிய தொடக்க விழாவில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.

நம் செயல்பாடு நிரூபிக்கும்

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இன்று அதிகம் தேவைப்படுவது நம்பிக்கை. அந்த நம்பிக்கை விதைக்கக்கூடிய நாள் தான் இன்று. யார் நம்பிக்கையை யார் பெறுவது என்பதில் தான் போராட்டமே உள்ளது. ஆனால் நம் செயல்பாடு அதை நிரூபித்துக் கொண்டே இருக்கும். இந்த நிகழ்வில் கட்சி பேதமின்றி அனைத்து ஆளுமைகளும் ஒன்று கூடி உள்ளனர்.

அமைச்சரின் அட்வைஸ்

தொடர்ந்து பேசிய அவர், "உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும். ஊடகம், பேச்சின் மூலமாகவும் கவர்ச்சிகள் மூலமாகவும் முட்டாள்களை தன் வசப்படுத்தி விடும். பின்பு புத்திசாலிகளை வாயடைக்க வைத்து விடும். அப்படி இருந்து விடாமல், மக்களிடம் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும். தவறுகள் யார் செய்தாலும் சுட்டிக் காட்ட வேண்டும். எனவே நம்பிக்கையை பெறக்கூடியவர்களாக நாம் அனைவருமே இருப்போம்." என நம்பிக்கை ஊடகத்திற்கு அறிவுரை வழங்கி தனது பேச்சை நிறைவு செய்தார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...