Nambikkai Global Launch: நம்பிக்கை பெரும் மாறுதல்களை ஏற்படுத்தும் - சீமான்

ஊடகம் சமூகத்தின் கண்ணாடி என்று குறிப்பிட்ட சீமான், 'நம்பிக்கை' ஊடகம் நேர்மையுடனும் உண்மையுடனும் உலகத் தமிழர்களின் நம்பிக்கையைப் பெறும் என்று வாழ்த்தினார்.

M

எழுதியவர்

3 மாதங்களுக்கு முன்
Nambikkai Global Launch: நம்பிக்கை பெரும் மாறுதல்களை ஏற்படுத்தும் - சீமான்

சென்னையில் நடைபெற்ற நம்பிக்கை உலகளாவிய தொடக்க விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய அவர், "ஊடகம் என்பது சமூகத்தின் கண்ணாடி. பெரும்பாலும் ஊடங்கங்கள் சார்பு செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நிலை உள்ளது. இது போன்ற காலகட்டத்தில் ஒரு நம்பிக்கைக்குரிய ஊடகமாக இந்த நம்பிக்கையை பார்க்கிறோம். நம்பிக்கை என்பது வெறும் வார்த்தை இல்லை. அது உலகில் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தியது. அனைத்து வளர்ச்சியும் நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது தான்." என்று பேசினார்

அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது

தொடர்ந்து பேசிய அவர் "இந்த நம்பிக்கை செய்தி பல நாடுகளில் வேர் பரப்ப வேண்டும். உண்மையும் நேர்மையுமாக நம்முடைய நம்பிக்கை ஊடகம் மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் என்பதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறேன். இந்த நம்பிக்கை உலகெங்கும் பரவி வாழ கூடிய தமிழர்களின் நம்பிக்கையை பெற வேண்டும்" என்று வாழ்த்தி தனது பேச்சை நிறைவு செய்தார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...