Nambikkai Global Launch: நம்பிக்கை மீது நம்பிக்கை வையுங்கள் - நடிகர் சரத் குமார்!

"பத்திரிகை உலகத்தோடு தனக்குள்ள பிணைப்பை நினைவுகூர்ந்த சரத்குமார், செய்திகளில் உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையும் அவசியம் என வலியுறுத்தினார்."

M

எழுதியவர்

3 மாதங்களுக்கு முன்
Nambikkai Global Launch: நம்பிக்கை மீது நம்பிக்கை  வையுங்கள் - நடிகர் சரத் குமார்!

சென்னையில் நடைபெற்ற நம்பிக்கை உலகளாவிய தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய பாஜக பிரமுகரும் நடிகருமான சரத் குமார் கூறுகையில் "என் பெரியப்பா ஆதித்தனார் பத்திரிக்கை தொடங்கிய காலத்தில், என் அப்பாவும் அவருடன் இணைந்து சில காலம் பயணித்தார். அதன் பின்னர், நானும் தெரு தெருவாக பத்திரிக்கை விநியோகம் செய்துள்ளேன். எனவே எனக்கும் பத்திரிக்கை உலகிற்கும் சம்மந்தம் உள்ளது. இந்த நிகழ்விற்கு என்னையும் அழைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்று தெரிவித்தார்.

எதையும் மிகைப்படுத்தாதீர்கள்!

தொடர்ந்து பேசிய அவர், "எதையும் மிகைப்படுத்தாமல் உண்மையை உண்மையாக சொல்ல வேண்டும். செய்தியில் நம்பகத்தன்மை இருக்க வேண்டும். செய்திகள் மக்களை சென்று அடையும் பொழுது அது உண்மையாக இருக்க வேண்டும். நம்பிக்கை குடும்பம் எப்பொழுதும் உண்மையாக தான் இருக்கும். எனவே நம்பிக்கை மீது நம்பிக்கை வையுங்கள்." என்று கூறினார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...