மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு; உதய சூரியன் சின்னத்தில் போட்டி!

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

M

எழுதியவர்

2 மாதங்களுக்கு முன்
மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு; உதய சூரியன் சின்னத்தில் போட்டி!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில், திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு (மமக) இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது. இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில், மமக தலைவரான பேராசிரியர் ஜவாஹிருல்லா இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.

கடந்த தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் உதய சூரிய சின்னத்தில் போட்டியிட உள்ளது. பாஜக - அதிமுக கூட்டணிக்கு எதிராக திமுக வலுவான கூட்டணியை அமைத்து வருகிறது. காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), விசிக, மதிமுக, முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், மனிதநேய மக்கள் கட்சிக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...