இன்னும் சில தினங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள நட்சத்திர தொகுதிகளின் நிலவரங்களை பற்றி பார்க்கலாம். சென்னையில் அமைந்துள்ளது கொளத்தூர் தொகுதி. தமிழக அரசியலில் ஒரு முக்கியமாக தொகுதியாக இது பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியானது 2008ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட பின், முதன் முதலாக 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெற்றி பெற்றார். அதன் பின் நடைபெற்ற இரண்டு (2016, 2021) சட்டமன்ற தேர்தல்களிலும் ஸ்டாலின் தொடர்ந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் கொளத்தூர் தொகுதியை தனது கோட்டையாக மாற்றி உள்ளார் ஸ்டாலின். வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என திமுகவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களை கொண்டுள்ள இத்தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றியை ஸ்டாலின் பதிவு செய்தார். வரும் தேர்தலுலும் திமுகவிற்கு சாதகமான சூழல் இருப்பதால் மு.க ஸ்டாலின் இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
