கச்சத்தீவு திருவிழா: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 3 நாட்கள் மீன்பிடிக்கத் தடை!

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு 3,996 பக்தர்கள் படகுகளில் பயணம் மேற்கொள்வதால், பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இன்று முதல் 3 நாட்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

M

எழுதியவர்

2 மாதங்களுக்கு முன்
கச்சத்தீவு திருவிழா: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 3 நாட்கள் மீன்பிடிக்கத் தடை!

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்த விழாவைக் முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளுக்காக ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் சனிக்கிழமை வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழகத்திலிருந்து மொத்தம் 3,996 பக்தர்கள் கச்சத்தீவு செல்ல உள்ளனர். இதற்காக ராமேஸ்வரத்திலிருந்து 92 விசைப்படகுகளில் 3,589 பக்தர்கள் செல்கின்றனர். அயல்நாட்டுப் படகுகள் மூலம் 307 பேர் விழாவில் பங்கேற்கின்றனர்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ராமேஸ்வரம் துறைமுகத்தில் அனைத்துப் படகுகளையும் மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று முதல் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். நாளை காலை சோதனைகள் நிறைவடைந்ததும் பக்தர்கள் கச்சத்தீவுக்குப் புறப்படுவார்கள். மீன்பிடி அனுமதிச் சீட்டு (Token) வழங்கப்படாததால், ராமேஸ்வரம் துறைமுகத்தில் 700-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...