சென்னை மெரினாவில் பயன்படுத்தும் குதிரைகளில் ஒன்றிற்கு கிளாண்டர்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதுதொடர்பாக நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நோய் என்ன்னென பாதிப்புகளை உண்டாக்கும் என பார்க்கலாம்.
ஆர்வமுடன் குதிரை சவாரி செல்லும் மக்கள்
தமிழ்நாட்டின் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள கடற்கரை, சுற்றுலாத்தலங்கள், மலை வாசஸ்தலங்களில் குதிரை சவாரி என்பது மிகவும் பிரபலமாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் ஆர்வமுடன் இந்த சவாரியை மேற்கொள்கின்றனர்.
குதிரைக்கு பரவிய கிளாண்டர்ஸ் நோய் தொற்று
இப்படியான நிலையில் சென்னையில் குதிரை ஒன்றக்கு கிளாண்டர்ஸ் எனப்படும் தொற்றுநோய் ஏற்பட்டது சில நாட்களுக்கு முன்பு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்த அந்த குதிரை உயிரிழந்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து குதிரைகளையும் பரிசோதனை செய்ய கால்நடைத்துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பர்கோல்டேரியா மல்லேய் என்ற பாக்டீரியாவால் இந்த தொற்று ஏற்படுகிறது. இது குதிரைகள் மட்டுமல்லாது கழுதைகள், கோவேறு கழுதைகளிலும் பாதிப்பை உண்டாக்குகிறது. இது மனிதர்களுக்கும் எளிதாக பரவும் என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. இது மரணத்தை ஏற்படுத்தக்கூடியது என சொல்லப்படுகிறது.
குதிரைக்கு பாதிப்பு என்பதை கண்டறியும் வழிகள்
மேல் சுவாசப் பாதை, நுரையீரல் பாதிப்பு மற்றும் தோலில் தொடர்ச்சியாகக் கட்டிகள் உருவாவது மூலம் இந்த நோய் பாதிப்பை நாம் கண்டறியலாம். மனிதர்களுக்கு பரவும் பட்சத்தில் இறப்பு விகிதம் 40% முதல் 95% வரை உள்ளதாக கவனமாக இருக்க வேண்டும். மஞ்சள் கலந்த பச்சை நிற சளி மூக்கின் துவாரங்களில் இருந்து குதிரைக்கு வெளிப்படும். சளிச்சவ்வுகளில் புண்கள் தோன்றி நட்சத்திர வடிவ தழும்புகளாக மாறும். தண்ணீர், உணவு முறையை பகிரும்போது ஒரு குதிரையில் இருந்து மற்றொரு குதிரைக்கு மிக எளிடஹக பரவும்.
குறிப்பாக குதிரை பராமரிக்கும் நபர்கள் தொடங்கி சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் வரை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கிளாண்டர்ஸ் அறிகுறிகள் என்னென்ன
இதன் அறிகுறிகளாக அதிக வியர்வை, குளிருடன் வரும் காய்ச்சல், தசை வலி, தோல் பகுதியில் வீக்கம், சருமத்தில் உருவாகும் கொப்பளம் அல்லது புண்கள், மார்பு வலி, மூச்சு விடுவதில் சிரமம், நுரையீரல் அழற்சி என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோய் அறிகுறி வெளிப்படவே 10 நாட்கள் முதல் 21 நாட்கள் வரை ஆகலாம். குதிரை, கழுதை போன்ற விலங்குகளுடன் தொடர்பிருக்கும் பட்சத்திலான மக்களும் மட்டுமே இந்த அறிகுறிகள் பொருந்தும். மற்றவர்கள் பயப்பட தேவையில்லை என சொல்லப்பட்டுள்ளது.
