“எக்ஸ்சேஞ்ச் அரசியல் நடக்கிறது” – சட்டப்பேரவையில் உதயநிதி குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் , ஆளும் அரசின் பெரும்பான்மை மற்றும் அரசியல் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

1 மணி நேரத்திற்கு முன்
“எக்ஸ்சேஞ்ச் அரசியல் நடக்கிறது” – சட்டப்பேரவையில் உதயநிதி குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவையில் அரசின் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய் நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து ஆதரவு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தீர்மானத்தின் மீது உரையாற்றி வருகின்றனர்.

அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் , ஆளும் அரசின் பெரும்பான்மை மற்றும் அரசியல் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

“தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும்பான்மை மக்கள் வாக்களிக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் ஆளுங்கட்சிக்கு கிடைத்தது சுமார் 1.72 கோடி வாக்குகள் மட்டுமே. மீதமுள்ள மக்கள் இந்த அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். கிட்டத்தட்ட 65 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சியாக இது உள்ளது” என்று அவர் கூறினார்.

மேலும், 234 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் ஆட்சிக்குத் தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு ஆளுங்கட்சிக்கு இல்லை என்றும், தற்போது அவர்களிடம் 106 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்தார்.

வெளியிலிருந்து ஆதரவு வழங்கும் கட்சிகள் கூட “குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது” என்பதற்காக மட்டுமே ஆதரவு தருவதாக கூறியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் அந்த கட்சிகள் தொடர்ந்து திமுக கூட்டணியிலேயே இருப்போம் என தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

அதேவேளை, மதச்சார்பற்ற ஆட்சி அமைப்போம் என்று கூறிய நிலையில், பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்த உறுப்பினர்களின் ஆதரவை அரசாங்கம் பெற்றிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அதிமுக அணியில் ஏற்பட்ட பிளவு மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரசியல் சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், “மாற்றம் என்று கூறியவர்கள் இன்று ‘எக்ஸ்சேஞ்ச் அரசியல்’ நடத்துகின்றனர்” என விமர்சித்தார்.

“க்ளீன் கவர்ன்மெண்ட் என்று கூறிய அரசு இன்று ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த அரசின் நிலைத்தன்மை குறித்து மக்களிடையே சந்தேகம் உருவாகியுள்ளது என்று கூறி மேலும் திமுக வெளிநடப்பு செய்வதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து திமுக கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...