தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப் அடிப்படையில் திமுக கூட்டணிக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கவுள்ள சூழலில், திமுக தனது பங்கீட்டில் ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கும், மற்றொன்றை தேமுதிகவுக்கும் ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள இரண்டு இடங்களில் திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என்பதால், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாசகோதரரும் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான எல்.கே.சுதீஷின் பெயரை வேட்பாளராக உறுதி செய்துள்ளார். இதன் மூலம் 2026-ஆம் ஆண்டு காலமுறைப்படி நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக தனது பிரதிநிதியை நாடாளுமன்றத்திற்கு அனுப்பவுள்ளது.
