வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, திமுக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிகளுக்கு இடையே அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில், முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2021 தேர்தலை விட இம்முறை ஒரு தொகுதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பணியை வேகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கூட்டணிக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முஸ்லிம் லீக் கட்சி இந்த கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதை உறுதி செய்துள்ளது.
