அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த உயர்வு 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலனை முன்னிறுத்தி அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அவற்றை முழுவீச்சில் நடைமுறைப்படுத்த அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகித்து வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, மாநில அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அதே அளவில் உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி, தற்போது 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டு 60 சதவீதமாக வழங்கப்படும். இந்த உயர்வால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் உள்ளிட்ட சுமார் 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த அகவிலைப்படி உயர்வால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,230 கோடி செலவினம் ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
