இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்!

உடல்நிலை பின்னடைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு, செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

M

எழுதியவர்

2 மாதங்களுக்கு முன்
இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு (101), உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, நேற்று திடீரென உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக் கருவி (Ventilator) பொருத்தப்பட்டு, மருத்துவர்கள் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் தவறி விழுந்ததில் தலையில் காயமடைந்த அவர், தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று (பிப்.23) இரவு மருத்துவமனைக்கு நேரில் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நல்லகண்ணுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடமும், அவரது உறவினர்களிடமும் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர்பாபு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...