ஆணவத்துல அலையாதீங்க.. பொதுவெளியில் பிரியா - பல்லவி மோதல்.. என்ன நடந்தது?

ஆர்.கே.நகரில் பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, அந்த தொகுதி தவெக எம்.எல்.ஏ. பல்லவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் இந்நிகழ்ச்சியில் பிரியா, பல்லவியை ஒரு எம்.எல்.ஏ., என்று கூட பாராமல் துளியும் மதிக்கவில்லை.

G

எழுதியவர்

2 மணி நேரத்திற்கு முன்
ஆணவத்துல அலையாதீங்க.. பொதுவெளியில் பிரியா - பல்லவி மோதல்.. என்ன நடந்தது?

சென்னை ஆர்.கே.நகரில் மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் பல்லவி இடையே மோதல் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயை மதிக்காத திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள்

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சர் விஜய் பதவியேற்றுள்ள நிலையில் இன்னும் பலரால் அவரை ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு சூழல் திகழ்கிறது. குறிப்பாக உள்ளாட்சி பதவிகளில் உள்ள திமுகவினர் முதலமைச்சரை மதிப்பதே இல்லை என தவெகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். மாநகராட்சி அலுவலகங்களில் விஜய் புகைப்படம் வைக்கவே மேயர் அனுமதி மறுக்கும் சம்பவமும் நடந்து வருகிறது.

இந்த சூழலில் தேர்தலில் திமுக தோல்வியடைந்த பிறகு சென்னை மேயரான பிரியா ராஜன் மாநகராட்சி அலுவலகத்துக்கே இரு வாரங்கள் வராமல் இருந்தார். தனக்கு காலில் அடிபட்டதால் வரவில்லை என காரணமும் குறிப்பிட்டார். இந்த நிலையில் நேற்று திமுக சார்பில் நடந்த கருணாநிதி பிறந்தநாள் விழாவில் மேயர் பிரியா தலைகாட்டினார். அதேசமயம் முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜயை மரியாதை நிமித்தமாக கூட மேயர் என்ற முறையில் பிரியா சந்திக்காதது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

எம்.எல்.ஏ. பல்லவிக்கு நேர்ந்த அவமானம்

இந்த சூழலில் தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இதில் ஆர்.கே.நகரில் பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, அந்த தொகுதி தவெக எம்.எல்.ஏ. பல்லவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் இந்நிகழ்ச்சியில் பிரியா, பல்லவியை ஒரு எம்.எல்.ஏ., என்று கூட பாராமல் துளியும் மதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் குத்து விளக்கு ஏற்றிய பிரியா மெழுகுவர்த்தியை நீட்ட அதனை பல்லவி பெற முயன்றார். ஆனால் அவரது கையை தட்டி விட்ட பிரியா அருகிலிருந்த மற்றொரு அதிகாரியிடம் கொடுத்தார். இது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இதனால் கோபப்பட்ட பல்லவி அங்கிருந்து வெளியேறி விட்டார்.

பதில் சொல்ல முடியாமல் எஸ்கேப்பான பிரியா

இதன்பின்னர் செய்தியாளர் மேயர் பிரியாவிடம், எம்.எல்.ஏ., பல்லவி அவமரியாதை செய்யப்பட்டது குறித்து கேள்வியெழுப்பினார். அதற்கு பிரியா எம்.எல்.ஏ., பல்லவி புரோட்டாகால் தெரியாமல் அப்படி நடந்துக் கொண்டார். மேயருக்குப் பின் ஐஏஎஸ் அதிகாரி தான் விளக்கேற்ற வேண்டுமென உள்ளது என காரணம் கூறி சமாளித்தார். எம்.எல்.ஏ.,வை விட மாவட்ட ஆட்சியர் உயர்ந்தவரா என அடுத்த கேள்வியை செய்தியாளர் கேட்க பதில் சொல்ல முடியாமல் எஸ்கேப் ஆனார்.

அதேசமயம் பல்லவியிடம் நடந்த சம்பவம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு, “நம் தொகுதியில் திமுக பெரிதாக எதுவும் செய்யவில்லை. தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே இருந்தார்கள். இம்முறை அதனால் தமிழக வெற்றிக் கழகம் களத்தில் இறங்கியிருக்கிறது. திமுகவினர் இன்னும் ஆவணம், திமிரில் இருக்கின்றனர். இதன் முடிவு என்ன என்பது அனைவருக்கும் தெரியும். விட்டுக்கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை. முதலமைச்சர் விஜய் வழியில் பொறுமையாக நடப்போம்” என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...