Coimbatore Child Abuse | கோவை சிறுமி கொலை.. குற்றவாளிகளை விடமாட்டோம்.. முதல்வர் விஜய் உறுதி

பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி ஆட்சிக்கு வந்த விஜய் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றங்களை தடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

G

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
Coimbatore Child Abuse | கோவை சிறுமி கொலை.. குற்றவாளிகளை விடமாட்டோம்.. முதல்வர் விஜய் உறுதி

கோவை மாவட்டம் சூலூரில் சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தனது இரங்கலையும் கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கிராமத்தில் 13 வயதுடைய சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் அருகே விளையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போனார். பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே சிறுமி கடைசியாக அருகிலுள்ள கடைக்கு செல்வதாக கூறியிருந்த நிலையில் அங்கு சென்று விசாரித்ததில் இளைஞர் ஒருவர் பைக்கில் அழைத்து சென்றது தெரிய வந்தது.

உடனடியாக சூலூர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர். உடனடியாக போலீசார் விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கார்த்தி என்ற சிறுமியின் குடும்பத்தினருக்கு அறிமுகமான நபர் அழைத்து சென்றது தெரிய வந்தது. இதற்கிடையில் சிறுமி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கார்த்தியை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. அவருக்கு துணையாக இருந்ததாக நண்பர் மோகன்ராஜூம் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சிறுமியின் பிரேத பரிசோதனை வந்தால் மட்டுமே பாலியல் வன்கொடுமை நடந்ததா என்பது தெரிய வரும். அதுமட்டுமல்லாமல் சிறுமியின் கொலைக்கான காரணம் பற்றி இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சூலூர் சிறுமி கொலை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

CMOTamilNadu

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி ஆட்சிக்கு வந்த விஜய் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றங்களை தடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...