14 வயது சிறுமியின் வீடியோவை பரப்பி கூட்டு வன்கொடுமை... செங்கத்தில் 15 வயது சிறுவர்கள் போக்ஸோவில் கைது!

செங்கத்தில் 14 வயது சிறுமியின் வீடியோவை காட்டி பாலியல் தொல்லை கொடுத்து, அதனை இணையத்தில் பரப்பிய 15 வயது சிறுவர்கள் இருவரைப் போலீசார் கைது செய்து சிறார் இல்லத்திற்கு அனுப்பினர்.

M

எழுதியவர்

2 மணி நேரத்திற்கு முன்
 14 வயது சிறுமியின் வீடியோவை பரப்பி கூட்டு வன்கொடுமை... செங்கத்தில் 15 வயது சிறுவர்கள் போக்ஸோவில் கைது!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில், 14 வயது சிறுமி ஒருவருக்குத் தொடர் பாலியல் தொல்லை அளித்த புகாரில் 15 வயதுடைய சிறுவர்கள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நெருக்கமான வீடியோவும் பரவிய மிரட்டலும்

செங்கத்தை அடுத்த திருவள்ளுவர் நகர் காலனியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (15) என்ற சிறுவன் காதலித்து வந்துள்ளான். இதற்கிடையே, இருவரும் நெருக்கமாக இருந்த தருணங்களைச் சிறுமியின் அனுமதியோடு தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து வைத்துள்ளான் விக்னேஷ். பின்னர், இந்த வீடியோக்களைத் தனது நண்பனான அரவிந்தனிடம் காண்பித்ததுடன், அவனது செல்போனுக்கும் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோக்களைப் பெற்றுக் கொண்ட அரவிந்தன், அதனைச் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் காட்டி மிரட்டி, தன்னை அனுசரித்துச் செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார். ஒருகட்டத்தில், விக்னேஷ் மற்றும் அரவிந்தன் ஆகிய இருவரும் சேர்ந்து அச்சிறுமியைத் தொடர்ந்து மிரட்டிப் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியுள்ளனர்.

துணிச்சலுடன் எதிர்த்த சிறுமி

தொடர்ந்து இவர்களால் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்த அந்தச் சிறுமி, ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களின் தொல்லைகளைத் தாங்க முடியாமல், அவர்களின் மிரட்டலுக்குப் பணிய மறுத்துள்ளார். "உன்னால் முடிந்ததைச் செய்துகொள்" என்று துணிச்சலுடன் அவர்களை எதிர்கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அரவிந்தன், தனது செல்போனில் இருந்த அந்தச் சிறுமியின் அந்தரங்க வீடியோக்களை அப்பகுதியில் உள்ள தனது நண்பர்கள் பலருக்கும் அனுப்பி இணையத்தில் பரப்பத் தொடங்கியுள்ளான்.

திருமணம் முறிந்ததால் வெளிச்சத்திற்கு வந்த விவகாரம்

இந்த வீடியோ, அந்தச் சிறுமியைத் திருமணம் செய்து கொள்ளவிருந்த அவரது மாமா மகன் பூவரசனுக்கும் பகிரப்பட்டுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பூவரசன், தன் தாயிடம் அந்த வீடியோவைக் காட்டி, அந்தச் சிறுமியைத் தான் திருமணம் செய்யப் போவதில்லை என்று கூறியுள்ளார். இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர், ஊர்ப் பெரியவர்களின் துணையோடு விக்னேஷின் வீட்டிற்குச் சென்று, சிறுமியைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளனர். ஆனால் விக்னேஷ் அதற்குப் பிடிவாதமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

போலீசார் அதிரடி நடவடிக்கை

இதனால் செய்வதறியாது திகைத்த சிறுமியின் பெற்றோர், செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து விரிவான புகார் ஒன்றை அளித்தனர். புகாரின் பேரில் உடனடியாக விசாரணையைத் தொடங்கிய போலீசார், சிறுமியின் அந்தரங்க வீடியோக்களைப் பரப்பி, பாலியல் தொல்லை கொடுத்த காதலன் விக்னேஷ் மற்றும் அவனது நண்பன் அரவிந்தன் ஆகிய இருவர் மீதும் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் கடலூர் சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளிப் பருவத்துச் சிறுவர்களே இதுபோன்ற கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow us on our official WhatsApp channel for breaking news alerts and updates!

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...