Anbumani Ramadoss | எங்க உழைப்பு இருக்கு.. பதவி சுகத்துக்கு போவீங்களா? - அன்புமணி கடும் விமர்சனம்!

3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக தங்களின் பதவிகளை தியாகம் செய்யவில்லை. இதன்மூலம் விஜயின் தூய அரசியல் மடிந்து விட்டது.

2 மணி நேரத்திற்கு முன்
Anbumani Ramadoss | எங்க உழைப்பு இருக்கு.. பதவி சுகத்துக்கு போவீங்களா? - அன்புமணி கடும் விமர்சனம்!

பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்த 3 அதிமுக எம்.எல்.ஏ.,க்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்கள் 3 பேரும் இன்று திடீரென தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அதற்கு முன்பாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் எம்.எல்.ஏ., பதவிகளை விட்டு விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்தனர். அவை ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் முறைப்படி தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனால் அரசியல் களம் திருப்புமுனை கண்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடுமையாக சாடினர். இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணியும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பதவி விலகிய 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் த.வெ.கவில் இணைந்தது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது. அவர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது.

3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக தங்களின் பதவிகளை தியாகம் செய்யவில்லை. ஆளும் கட்சியில் சேர்ந்து அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்ற துடிப்பு தான் அவர்களின் இந்த நடவடிக்கைக்கு காரணம் ஆகும். முதலமைச்சரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆளும் கட்சியின் இணைய வாய்ப்பு இல்லை. முதலமைச்சர் விஜய் இதையெல்லாம் எவ்வாறு அனுமதிக்கிறார் என்பது தான் கேள்வியாக உள்ளது.

மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூவரும் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அவர்களை நிறுத்தி வைத்து வெற்றி பெறச் செய்தால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை பெரும்பான்மை வலிமையை நோக்கி முன்னேறும் என்பது தான் இதற்கான காரணம். இதன் மூலம் முதலமைச்சர் விஜய் அவர்கள் கூறி வந்த தூய அரசியல் மடிந்து விட்டது.

3 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வெற்றியில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களின் கடுமையான உழைப்பு அடங்கியிருக்கிறது. அதற்கு மதிப்பளிக்காமல், வாக்களித்த மக்களின் தீர்ப்பை அவமதித்து விட்டு பதவி சுகத்திற்காக இன்னொரு கட்சியின் சேர்வது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது” என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...