அரசியலா? சினிமாவா? - விஜய்யின் திடீர் 'யு-டர்ன்' சமூக வலைதளங்களில் குவியும் விமர்சனங்கள்!

'ஜனநாயகன்' பட நஷ்டத்தை ஈடுகட்ட விஜய் மீண்டும் நடிக்கப் போவதாக வெளியாகி இருக்கும் தகவல், அரசியல் களத்தில் விமர்சனங்களையும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களையும் குவித்து வருகிறது.

M

எழுதியவர்

1 மாதங்களுக்கு முன்
அரசியலா? சினிமாவா? - விஜய்யின் திடீர் 'யு-டர்ன்' சமூக வலைதளங்களில் குவியும் விமர்சனங்கள்!

தமிழக அரசியலில் அதிரடியாகக் களமிறங்கி, 'ஜனநாயகன்' தான் தனது கடைசித் திரைப்படம் என்று அறிவித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இப்போது மீண்டும் நடிக்கப் போவதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. "மக்களுக்காகவே என் வாழ்நாள்" என்று முழக்கமிட்டுவிட்டு, இப்போது "ஒரே ஒரு குட்டிப் படம் மட்டும் பண்ணிட்டு வந்துடுறேன்" என விஜய் ரூட்டை மாற்றியிருப்பது அவரது அரசியல் தீவிரத்தன்மை குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

தயாரிப்பாளர் நஷ்டமும்... நெட்டிசன்களின் கிண்டலும்!

'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவே விஜய் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைக் கேள்விப்பட்ட நெட்டிசன்கள், "படம் லீக் ஆனா போலீஸில் புகார் தருவார்கள், ஆனால் எங்கள் அண்ணன் தயாரிப்பாளருக்காக ஒரு வருடம் அரசியலையே தள்ளி வைக்கிறாரே... இதுதான் உலக மகா மனிதாபிமானம்!" என வடிவேலு பாணி நகைச்சுவைகளுடன் கலாய்த்து வருகின்றனர். ரஜினி போன்ற நடிகர்கள் நஷ்டம் ஏற்பட்டால் பணத்தைத் திருப்பிக் கொடுப்பார்கள், ஆனால் விஜய் மீண்டும் வந்து 'குத்துப்பாட்டு' போடுவாரா? என எதிர்க்கட்சியினர் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

குழப்பத்தில் தொண்டர்கள்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

விஜய்யின் இந்த முடிவால் தவெக தொண்டர்கள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். "கையில் கொடியைப் பிடிப்பதா அல்லது தியேட்டரில் பேனரைத் தூக்குவதா?" என்று தெரியாமல் அவர்கள் தவித்து வரும் நிலையில், சினிமா ரசிகர்கள் இந்தச் செய்தியைக் கொண்டாடி வருகின்றனர். "ஷூட்டிங் ஸ்பாட் பிரியாணியை விட அண்ணனுக்கு மனசு வரவில்லை போல" எனப் பறக்கும் மீம்ஸ்கள், விஜய்யின் அரசியல் நம்பகத்தன்மைக்குச் சவாலாக அமைந்துள்ளன.

நம்பிக்கையில் 'லீக்' விழுந்துவிடாமல் ஜாக்கிரதை!

"அரசியல் என்பது 'ஒன் மோர்' கேட்கும் சினிமா ஷூட்டிங் அல்ல; இங்கே ஒரு முறை 'டேக்' சொதப்பினால் மக்கள் நிரந்தரமாக 'பேக்-அப்' செய்துவிடுவார்கள்" எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். தயாரிப்பாளர் நஷ்டத்தை விட, உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையில் 'லீக்' விழுந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என இணையவாசிகள் விஜய்யை 'லெப்ட் அண்ட் ரைட்' வாங்கி வருகின்றனர். இனி விஜய் மேடையில் 'குட்டி ஸ்டோரி' சொன்னால் மக்கள் நம்புவார்களா என்பது சந்தேகமே.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...