MK Stalin | ஸ்டாலின் தோத்துட்டாரே.. கதறி அழுத சத்யராஜ்.. பதறிய சேகர்பாபு

எப்பேர்ப்பட்ட தலைவரை தோற்கடித்தோம் என்பதை உணர்வீர்கள். முதல்வருக்கே உதாரணமாக இருந்தவரை தோற்கடித்து விட்டார்கள். என்னை விர்ச்சுவர் வாரியர்ஸ் விமர்சிப்பார்கள். அதனையெல்லாம் நான் கண்டுக்கொள்ள மாட்டேன் என சத்யராஜ் கூறியுள்ளார்.

G

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
MK Stalin | ஸ்டாலின் தோத்துட்டாரே.. கதறி அழுத சத்யராஜ்.. பதறிய சேகர்பாபு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் தோற்றதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என நடிகர் சத்யராஜ் கண்கலங்கியபடியே சொன்ன சம்பவம் திமுக தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழாவில் சத்யராஜ் உரையாற்றினார். அப்போது, “1967ம் ஆண்டு தான் திமுக ஆட்சிக்கு வந்தது. அதற்கு முன்னாள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஒரு பண்ணையார் கட்சி. என் வயதுக்காரர்கள் அனைவருக்கும் அந்த அரசியல் சூழல் தெரியும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழ்நாடு நிமிர்ந்தது. அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதி ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகாலம் தமிழ்நாட்டை வளமாக்கியுள்ளது. அதை அப்படியே செயல்படுத்தி காட்டியவர் மு.க.ஸ்டாலின் தான். எங்களுக்கு மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சர். கரூர் சம்பவத்தை அரசியல்லாக்க வேண்டும் என பெருந்தன்மையோடு சொன்னார். அவர் தான் எனக்கு முதல்வர்.

திமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் நான் பங்கேற்றேன். நான் திமுக அனுதாபி தான். ஆனால் தொண்டர் இல்லை. ஆளும் கட்சியாக இருந்தபோது தயங்கி தயங்கி வந்தேன்.இப்போது சொல்கிறேன் நான் திமுககாரன் தான். எனக்கு கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் ஜெயித்திருக்கலாம். அவர் தோற்றது கஷ்டமாக உள்ளது. நான் சினிமாவில் இருப்பதால் எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக் கொள்வோம். இதை அப்படி எடுக்க முடியவில்லை. பட்டு திருந்தினால் தான் புத்தி வரும்.

எப்பேர்ப்பட்ட தலைவரை தோற்கடித்தோம் என்பதை உணர்வீர்கள். முதல்வருக்கே உதாரணமாக இருந்தவரை தோற்கடித்து விட்டார்கள். என்னை விர்ச்சுவர் வாரியர்ஸ் விமர்சிப்பார்கள். அதனையெல்லாம் நான் கண்டுக்கொள்ள மாட்டேன். விஜய் ஒரு முதலமைச்சர் மாதிரியா பேசுகிறார். பெரியாரின் கொள்கைகளை அண்ணா சட்டமாக்கி தமிழ்நாட்டை பொற்காலமாக்கியது திமுக தான். இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றால் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களுக்கு வேறு பெயர் வைத்து விடுங்கள் போதும்.

சினிமா மோகம் இருக்க வேண்டியது தான். ஆனால் மாற்றம் வேண்டும் என்றால் அது எப்படி இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்.விஜய் கட்சி ஆரம்பிக்கும்போது பெரியார், அண்ணா என் கொள்கை தலைவர்கள் என சொன்னால் அது திமுகவைத்தானே குறிக்கும். எல்லா கட்சியிலும் ஒரு குறை இருக்கும். அதற்காக எங்கேயோ கொண்டு போய் ஓட்டு போட்டு விடுவீர்களா?.. 5 வருடம் ஆட்சியில் இருப்பவர்கள் மேல் கருத்து வேறுபாடு இருக்கும் தான். இனிமேலாவது கேள்வி கேட்டு பழகுங்கள்” என தெரிவித்தார். இதில் ஸ்டாலின் தோற்றது பற்றி பேசும்போது சத்யராஜ் கதறி அழுதார். இதனைக் கண்டு முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பதறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...