CM Joseph Vijay | பரிதவிக்கும் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள்.. விஜய்க்கு அட்வைஸ் வழங்கிய வினோதினி!

தன்னை மக்களுக்கு முன் ப்ரூவ் பண்ணவேண்டும் என்று முயற்சிக்கும் இந்த இளம் வயதுடைய எம்எல்ஏக்கள் அதைச்செய்வதன் மூலம் மேலும் தவறுகளைச்செய்ய வாய்ப்புண்டு என நடிகை வினோதினி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

G

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
CM Joseph Vijay | பரிதவிக்கும் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள்.. விஜய்க்கு அட்வைஸ் வழங்கிய வினோதினி!

தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விஜய் முறைப்படி பயிற்சி வழங்க வேண்டும் என நடிகை வினோதினி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தவெக தலைமையின் கட்சி தொடங்கியதன் உள்நோக்கம், தமிழ்நாட்டிற்கான எண்ணம், பின்னிருந்து இயக்கும் கூட்டம் இவற்றைப்பற்றி தெளிவாகத் தெரியாததால் அவரைச்சொல்லவில்லை, ஆனால், குறைந்தபட்சம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இளம் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும், அதன் மூலம் தானும் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வந்திருக்கின்றனர் என்று நம்புவோம்.

ஆனால், இன்று அவர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாமல், தவறான எதையாவது ஒன்றைச் செய்துவிட்டு மக்கள்முன் எக்ஸ்போஸ் ஆகிநிற்கின்றனர் என்பதே உண்மை.

ஒரு கார்பரேட் கம்பெனில் கூட, முதல் ஆறுமாதமோ, ஒரு வருடமோ இண்டர்ன்ஷிப் போன்று வைத்து, அனைத்து டிபார்ட்மெண்டிற்கும் அனுப்பி, எல்லாவற்றையும் முதலில் பார்த்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக பொறுப்புக்களை கூட்டுவர். ஆனால் இங்கு அத்தனைப்பேரையும் தொபுக்கட்டீர் என்று நீச்சல்குளத்தில் தள்ளுவதுபோல் தள்ளிவிட்டு, இப்போ உடனே நீச்சல் அடி என்று சொல்வதுபோல் தலைமை செய்திருக்கிறதோ என்ற எண்ணம் வருகிறது.

தன்னை மக்களுக்கு முன் ப்ரூவ் பண்ணவேண்டும் என்று முயற்சிக்கும் இந்த இளம் வயதுடைய எம்எல்ஏக்கள் அதைச்செய்வதன் மூலம் மேலும் தவறுகளைச்செய்ய வாய்ப்புண்டு. உதாரணம், தொழிற்துறை அமைச்சர் சிரித்துக்கொண்டே பிரஸ்ஸை சந்தித்தது, ரீல்ஸ் போல தொழிற்துறை சார்ந்த விஷயங்களை விளக்கியது, அறநிலையத்துறை அமைச்சர் முறுக்கு ஆய்வு மேற்கொண்டது, மேலும் ஒருவர் அரசு மருத்துவமனை ஆய்வு மேற்கொண்டது. நான் பார்த்தவை இவை, என் பார்வைக்கு வராதது இன்னும் இருக்கலாம்.

முதல்வர் விஜய் அவர்கள், தனது கட்சியில் உள்ள இளம்தலைமுறையினருக்கு, ஆரம்பத்திலிருந்து, ஆணா ஆவண்ணாவிலிருந்து ஆரம்பித்து, ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி கையாளவேண்டும் என்ற இலக்கு நோக்கிய பயிற்சிக்கு வழிவகுத்தால் சிறப்பாக இருக்கும்" என வினோதினி வைத்தியநாதன் கூறியுள்ளார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...