மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஏமாற்றாதீர்கள் என தவெக அரசுக்கு எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தன்னை வெற்றிப்பெற வைத்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஆட்சி அமைப்பதற்கு குதிரை பேரம் நடக்கவில்லை என முதலமைச்சர் தனக்குத்தானே சான்றிதழ் கொடுத்துக் கொள்கிறார். மன்னார்குடி எம்எல்ஏ காமராஜர் என்ன செய்தீர்கள்?.. அந்தக் கட்சித் தலைவர் டிடிவி தினகரனுக்கு தெரியாமல் கடத்திக் கொண்டு போனார்கள். இதற்குப் பெயர் தூய சக்தியா?.. நாற சக்தி.. அது மட்டுமல்லாமல் அதிமுக பாஜக பெயரை மற்றும் சில பேர், அல்லு சில்லு கட்சி என குறிப்பிடுகிறார். அதிமுக அள்ளி செல்லு கட்சியில் என்றால் ஏன் அவர்களின் சில எம்எல்ஏக்களை சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினீர்கள்.. எதற்கு சோபா செட் அனுப்பினீர்கள்.. கடைசியில் அந்த அதிமுக எம்எல்ஏக்களையும் கழட்டி விட்டு விட்டார்.
நம் #ChepaukTriplicane தொகுதியில் அயராது உழைத்து மீண்டும் நம்மை வெற்றி பெற வைத்த கழக உடன்பிறப்புகளுக்கு இன்று நன்றி தெரிவித்தோம்.
“எது நடந்தாலும், ‘தி.மு.க.தான் காரணம்’ என்ற Template-ஐ, Tool Kit-ஆக தூக்கிக் கொண்டு அலையும் #SofaModel அரசின் அவலங்களை மக்கள் மத்தியில்… pic.twitter.com/y3QqvmIqHW
நாம் இந்த தேர்தலில் களத்தில் யாரு எதிரின்னு தெரியாமல், இல்லாத எதிரி கூட சண்டை போட்டுள்ளோம். எங்க மிஸ் பண்ணிட்டோம் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். அடுத்த முறை உண்மையான எதிரியை கண்டறிந்து செயல்பட்டால் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். தமிழ்நாடு முழுக்க உண்மையான எதிரி யாருன்னு தெரியாம களமாடி விட்டோம். மக்கள் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருந்தோம். தெரு, தெருவாக போய் ஓட்டு கேட்டோம். ஆனால் நம்ம குடும்பத்திடம் ஓட்டு கேட்க மறந்து விட்டோம். நம்ம பசங்க, உறவினர்களிடம் திமுக சாதனையை சொல்ல தவறி விட்டோம். இனி வரும் காலங்களில் அதை நாம் திருத்திக் கொள்ள வேண்டும். நம்ம வீட்டு பிள்ளைகளை அரசியல்படுத்த வேண்டும். தவெக அரசின் அவலங்களைப் பற்றி வீட்டில் பேச வேண்டும்.
திராவிட மாடல், 1 ட்ரில்லியன் எக்கனாமி பெருமையா பேசிட்டு இருந்த தமிழ்நாட்டை, இன்னைக்கு இந்த ஆளுங்கட்சி சோபா மாடல் ஆக்கிய பெருமை தவெகவையே சேரும். அதேபோல் அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3ம் இடத்துக்குப் போய் விட்டது. இதை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தது யாரு.. திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட் அடிச்சதை பயந்துகிட்டு வேடிக்கைப் பார்க்குறது யாரு?.. புதுசா திட்டம் கொண்டு வர்றதுக்கு, வாக்குறுதி நிறைவேற்றுவதற்கு ஆறு மாசம் அவகாசம் வேண்டுமா எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாதீர்கள்.
திமுக ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் கொடுத்தோம். அதை நிறுத்தி விடாதீர்கள். இன்னைக்கு உங்க ஆட்சியுடைய கொடுமையைத் தமிழ்நாட்டு மக்களால அரை நாள் கூட தாங்க முடியவில்லை. ஆனா, தினமும் பிரச்சனை இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்குது. அதுல நீங்க சொதப்பினால் நாங்க எல்லாம் வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்கணுமா? வேடிக்கை பாக்கணுமா? நிச்சயம் குரல் கொடுப்போம். நிச்சயம் உங்க தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.