MK Stalin | EWS இட ஒதுக்கீட்டை ஸ்டாலின் தடுத்தாரா? - ஆ.ராசா உருட்டு.. நெட்டிசன்கள் விமர்சனம்!

இந்திய அரசியலமைப்பு சட்டம் 103 வது திருத்தத்தின்படி பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீடு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இது தமிழ்நாட்டில் நடைமுறையில் இல்லை.

G

எழுதியவர்

2 மணி நேரத்திற்கு முன்
MK Stalin | EWS இட ஒதுக்கீட்டை ஸ்டாலின் தடுத்தாரா? - ஆ.ராசா உருட்டு.. நெட்டிசன்கள் விமர்சனம்!

தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான EWS இட ஒதுக்கீட்டை மு.க.ஸ்டாலின் வரவிடாமல் தடுத்தார் என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்தார். அதற்கு நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

விஜயை விளாசியெடுத்த ஆ.ராசா

சென்னை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகிய இருவரும் இன்று செய்தியாளர்களை சந்தித்து தமிழக முதலமைச்சர் விஜய் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் சரமாரியாக விமர்சனத்தை முன் வைத்தனர்.

அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விஜய் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். அதனை குறிப்பிட்டு பேசிய ஆ.ராசா, “யாரைப் பார்த்து நீங்கள் குறை சொல்கிறீர்கள் தமிழ் தாய் வாழ்த்துக்கு சென்று நீங்கள் கடிதம் கொடுக்கிறீர்கள், அரசியல் சட்டத்தால் திருத்தப்பட்ட EWS இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டேன் என சொன்னவர் தான் நீங்கள் சொன்ன ஸ்டாலின் சார்.

ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு போட்டிருப்பது வெறும் அரசாணை மட்டும்தான். அரசியல் சட்டத்தை மீறினால் ஆட்சியை கலைக்கலாம். நாங்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அதை மீறி இருக்கிறோம். நீங்கள் தமிழ்த்தாய் வாழ்த்திற்காக கெஞ்சுகிறீர்களே.. உங்கள் வீரம் என்ன? இதை நாங்கள் வெளியில் அம்பலப்படுத்தக் கூடாதா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் EWS இட ஒதுக்கீடு பற்றிய ஆ.ராசா கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

EWS இட ஒதுக்கீடு என்ன?

இந்திய அரசியலமைப்பு சட்டம் 103 வது திருத்தத்தின்படி பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீடு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி உயர் சாதி பிராமணர் உள்ளிட்ட முற்பட்ட வகுப்பினரில் இருக்கும் நலிவடைந்த மக்கள் பயனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்தது.அதாவது ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சத்திற்கும் குறைவாக அல்லது ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பயன்பெற முடியும் என சொல்லப்பட்டது.

இந்த சட்டத்தை முந்தைய அதிமுக ஆட்சி நடைமுறைப்படுத்தவில்லை. இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி இந்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த முடியாது என தெரிவித்தார்.

கட்டாயமாக்கப்பட்ட சட்டமே இல்லை

ஆனால் உண்மையில் ஸ்டாலின் இந்த சட்டத்தை தமிழ்நாட்டில் வரவிடாமல் தடுத்தார் என ஆ.ராசா சொல்வது பொய் என்று நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதாவது அந்த சட்ட திருத்தம் சொல்வது என்னவென்றால் இந்த இட ஒதுக்கீட்டை தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பதை மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம்.

செயல்படுத்தாத மாநிலங்கள் எந்தவித சட்ட சிக்கலையும் எதிர்கொள்ள தேவையில்லை. இந்த சட்டம் மத்திய அரசு பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் முழுமையாக பொருந்தும். மாநில அரசுகள் இந்த இட ஒதுக்கீட்டை ஒருவேளை ஏற்றுக்கொண்டால் தங்கள் மாநிலத்தின் சூழலுக்கு ஏற்ப வருமான சான்றிதழ், வழங்கும் முறை ஆகியவற்ற நிர்ணயித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதனால் கட்டாயமாக இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை தமிழ்நாட்டில் பின்பற்ற வேண்டும் என்ற நிலையில் ஸ்டாலின் அதனை நிராகரித்து இருந்தால் ஆ.ராசா சொல்வது போல இருந்திருக்கும். ஆனால் கட்டாயம் இல்லாத ஒரு சட்டத்தை வரவிடாமல் தடுத்தார் என சொல்வது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...