Seeman | வெட்கம், மானம் இருக்கா? .. காங்கிரஸை சாடிய சீமான்.. பதறிய அரங்கம்!

காங்கிரஸ் கட்சி துரோகம் செய்தபிறகு தான் திமுககாரர்களுக்கு அறிவு வருகிறது. ஈவேரா பெரியார் எங்களுக்கு பகுத்தறிவு ஊட்டினார் என சொல்கிறார்கள். ஆனால் அனைவரும் மங்குனிகளாக உள்ளனர்.

G

எழுதியவர்

2 மணி நேரத்திற்கு முன்
Seeman | வெட்கம், மானம் இருக்கா? .. காங்கிரஸை சாடிய சீமான்.. பதறிய அரங்கம்!

காங்கிரஸ்காரர்களுக்கு சூடு, சொரணை இருக்கிறதா என சீமான் தரக்குறைவாக வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்துள்ளது பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

ஈழத் தமிழர்களின் போராட்ட உணர்வுகளைப் பிரதிபலிக்கும் புரட்சிப் பாடல்களைப் பாடுவதில் புகழ்பெற்ற தேனிசை செல்லப்பா நினைவேந்தல் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காங்கிரஸ் கட்சியை தரக்குறைவாக விமர்சித்தார்.

அவர் பேசுகையில், “நான் இந்த தேர்தல் தோல்வி, வெற்றிக்கு அப்பாற்பட்டவன். நீங்க எனக்கு ஓட்டு போட்டால் போடுங்கள். இல்லாவிட்டால் போங்கள். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா, ஆளுங்கட்சியில் இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என கூறுகிறார். இது எவ்வளவு ஜனநாயக அராஜகம்?.. அதேபோல் எதிர்க்கட்சியே இருக்கக்கூடாது என அமைச்சர் ரமேஷ் என சொல்கிறார்.

விஜய் இன்னும் கொஞ்சம் என்னை சப்போர்ட் பண்ணியிருக்கலாம் என சொல்கிறார். இதுவே அதிகம் தான். இந்த சட்டமன்ற தேர்தலில் அரசியல் பேரிடர் ஏற்பட்டுள்ளது. அதை மக்கள் அனுபவிக்க வேண்டியது தான்" என கூறினார்.

தொடர்ந்து பேசிய சீமான், “நான் காங்கிரஸ் கட்சிக்காரர்களிடம் ஒன்றை கேட்கிறேன். நீங்கள் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறீர்களா?.. உங்களுக்கு சூடு சொரணை இருக்கிறதா?.. வெட்கம், மானம், ரோசம் உள்ளதா?.. கசங்காத வேட்டி சட்டை மட்டும் வெட்கம் இல்லாமல் கட்டிக் கொள்கிறீர்கள் (இதனை சொல்லும் போது தரக்குறைவாக சீமான் பேசினார்).

இப்போதுதான் திமுககாரர்களுக்கு அறிவு வருகிறது. ஈவேரா பெரியார் எங்களுக்கு பகுத்தறிவு ஊட்டினார் என சொல்கிறார்கள். இவர்கள் அனைவரும் மங்குனிகள். காங்கிரஸ்காரர்களை அன்றைக்கே திமுக ஓட விட்டிருக்க வேண்டும். காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் 10 எம்பிக்களை தமிழ்நாட்டில் இருந்து வைத்துள்ளது. அவை அனைத்தும் திமுக போட்ட பிச்சை. உண்மையிலேயே மானஸ்தனாக இருந்தால் எம்பி பதவியை ராஜினாமா செய்யுங்கள்.

விலகி இடைத்தேர்தலை தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்து சந்தித்து பாருங்கள். உங்களுடைய கூட்டணி பெரிய கூட்டணி தான். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து இடைத்தேர்தலை சந்தித்துப் பாருங்கள். திமுக பெயரில் இந்த தேர்தலில் ஒரு மாநிலங்களவை சீட்டு வாங்கியது. அதில் யாரோ ஒருவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவர் பெயர் கூட என் வாயில் நுழைய மாட்டேங்குது. அந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திருநாவுக்கரசு, தங்கபாலு ஆகியோருக்கு வழங்கியிருக்கலாம்” என தெரிவித்தார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...