Jawahirullah | அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள்.. முதல்வர் விஜயை விமர்சித்த ஜவாஹிருல்லா!

தமிழ்நாட்டில் புதிதாக தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றுள்ளது. அதன் பிறகு வழக்கத்திற்கு மாறாக தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நமக்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது.

G

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
Jawahirullah | அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள்.. முதல்வர் விஜயை விமர்சித்த ஜவாஹிருல்லா!

தமிழ்நாட்டில் குற்றங்கள் நடைபெறாதவாறு போர்க்கால அடிப்படையில் முதலமைச்சரின் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா MLA கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, " தமிழ்நாட்டில் புதிதாக தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றுள்ளது. அதன் பிறகு வழக்கத்திற்கு மாறாக தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நமக்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது. கடந்த திமுக ஆட்சியை விமர்சித்து நாங்கள் தூய்மையான ஆட்சியை தருவோம் என்று சொல்லித்தான் தமிழக வெற்றிக் கழகத்தினர் மக்களிடம் வாக்கு சேகரித்தார்கள். மக்களை பாதுகாப்பது தான் ஒரு அரசின் கடமையாகும்.

சரியான முறையில் இனி குற்ற சம்பவங்கள் நடக்காதவாறு உயரிய ஆலோசனைகள் நடத்தப்பட்டு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டு தமிழக வெற்றிக் கழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்

தொடர்ந்து அவரிடம், அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இது தொடர்பாக அதிமுக தரப்பில், "குதிரை பேரம் நடைபெற்று இருப்பதாகவும், சிபிஐ விசாரணை வேண்டும்" எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஜவாஹிருல்லா, "அதாவது வாக்களித்து விரலில் வைக்கப்பட்டிருந்த மை அழிவதற்கு முன்பாகவே புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள், தங்களுக்கு எதிரணியில் இருப்பவர்களை, தங்கள் கட்சி வேட்பாளர்களை தேர்தலில் தோற்கடித்தவர்களை தங்கள் பக்கம் இழுப்பதை நான் அற வழியாக பார்க்கவில்லை. தமிழக வெற்றிக் கழகம் நாங்கள் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள், மாற்றத்தை கொண்டு வருவோம் என சொன்னார்கள். ஆனால் இவ்வளவு சீக்கிரம் ஒரு கட்சியின் எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு மற்றொரு கட்சியில் இணைந்தது வேறு நடந்ததாக நினைவில் இல்லை. இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா என பொதுமக்கள் கேள்வி கேட்க தொடங்கி விட்டார்கள் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மனிதநேய மக்கள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் இரண்டு இடங்களில் போட்டியிட்டது. இதில் மணப்பாறை தொகுதியில் அக்ககட்சி வேட்பாளர் தோல்வியடைய, நாகப்பட்டினம் தொகுதியில் ஜவாஹிருல்லா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...