Minister Ramesh | பணத்திற்கு செய்வது கடவுள் சேவை இல்லை...அமைச்சர் ரமேஷ் கொந்தளிப்பு!

திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டதிற்கு அமைச்சர் ரமேஷிற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அப்போது அமைச்சரின் சாதி பெயரை குறிப்பிட்டு இருந்தார்.

G

எழுதியவர்

2 மணி நேரத்திற்கு முன்
Minister Ramesh | பணத்திற்கு செய்வது கடவுள் சேவை இல்லை...அமைச்சர் ரமேஷ் கொந்தளிப்பு!

திருச்செந்தூர் கோயில் ஆய்வு தொடர்பாக அன்னை சாதியை குறிப்பிட்டு விமர்சித்த திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.

நடந்தது என்ன?

முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நேற்று அதிகாலை திடீரென இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சண்முக விலாசம் மண்டபம் வழியாக விரைவு தரிசனம் மேற்கொள்ள அமைச்சர் என தெரியாமல் அவரிடம் அங்கிருக்கும் அர்ச்சகர் மற்றும் இரு காவலாளிகள் பணம் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாதியை குறிப்பிட்டு விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்

இந்த நிலையில் திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டதிற்கு அமைச்சர் ரமேஷிற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

அவர் தனது அறிக்கையில் அமைச்சர் ரமேஷ் சாதி பெயர் குறிப்பிட்டு இருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பணத்திற்கு கடவுள் சேவை தேவையில்லை

இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ரமேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.

பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.

நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.

தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.

இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...