MK Stalin | மாற்றம் பெற முடியாமல் தவிக்கும் திமுக.. திணறும் மு.க.ஸ்டாலின்.. நடப்பது என்ன?

திமுகவில் 60 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு பதவி கொடுப்பதை காட்டிலும் இளம் வயதினருக்கு பதவியை கொடுத்து எதிர்கால தலைமுறையினருக்கு சீனியர்கள் வழி விடலாம் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

G

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
MK Stalin | மாற்றம் பெற முடியாமல் தவிக்கும் திமுக.. திணறும் மு.க.ஸ்டாலின்.. நடப்பது என்ன?

2026 சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய திமுக மீண்டும் எழுச்சி பெறும் வகையில் தயாராகி வருகிறது. ஆனால் இந்த மாற்றத்திற்கு கட்சியில் இருப்பவர்களே முட்டுக்கட்டையாக அமைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தோல்வியை சந்தித்த திமுக

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஆளும்கட்சியாக இருந்த திமுக 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக மாறியது. அதோடு மட்டுமல்லாமல் தேர்தலுக்கு முன்பு 15க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த திமுகவில் இருந்து வெற்றி பெற்ற ஐந்து கட்சிகள் பிரிந்து விஜயின் தமிழக வெற்றிக்கழகத்துடன் இணைந்து கொண்டு அமைச்சரவையிலும் பங்கேற்றுள்ளது.

இந்த சூழலில் இந்த தேர்தல் தோல்வியை திமுக தொண்டர்களோ மற்றும் தலைவர்களோ என யாருமே எதிர்பார்க்கவில்லை. நல்லாட்சி கொடுத்த ஸ்டாலின் மீண்டும் வருவார் என காத்திருந்த அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். இவ்வளவு ஏன் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியை தழுவி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் 15 பேர் தோல்வியை தழுவினர்.

மாற்றம் பெறும் முனைப்பில் திமுக

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் செயலாளர் துரைமுருகன் ஆகிய இருவரும் தோல்வியை தழுவி வரலாற்றில் மோசமான சாதனையை படைத்தனர். இந்நிலையில் தேர்தலுக்குப் பின்னர் தன்னை சுற்றி பல சதிகளும் ஏமாற்று வேலைகளும் நடந்ததை ஸ்டாலின் உணர்ந்துள்ளார். இதனால் தோல்விக்கு யாரையும் காரணம் காட்டாமல் தானே பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சியை பலப்படுத்த வேண்டும், அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல என்னென்ன நடவடிக்கைகளை திமுக செய்ய வேண்டும் என்பதை பொதுமக்களிடம் இருந்து ஆலோசனை கேட்டு பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் 87 வயதான திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அந்த பதவியில் இருந்து விலகி ஓய்வு பெறலாம் என முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் அவர் எதிர்பாராத விதமாக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனால் அரசியலில் ஓய்வு பெறும் முடிவை துரைமுருகன் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் திமுகவின் அடுத்த பொதுச் செயலாளராக டி.ஆர்.பாலுவை நியமிக்கலாம் என அவர் பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவேளை தற்போது பொருளாளராக இருக்கும் டி.ஆர்.பாலு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டால் அடுத்தக்கட்ட தலைவர்கள் வரிசையிலும் மாற்றம் நிகழும். அந்த வகையில் துணை பொதுச்செயலாளர் இடத்திற்கு தென் மாவட்டங்களில் இருந்து ஒருவரை நியமிக்கலாம் என திமுக தலைமை நினைத்துள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி எம்.பி.யும், திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழியிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தென் மாவட்டங்களில் அதிக வாக்கு வங்கி கொண்ட நாடார் சமூகத்தை சார்ந்த அப்பாவு பெயரை கட்சி தலைமை பரிந்துரை செய்த நிலையில் அதற்கு கனிமொழி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் அப்பாவுவை மாவட்ட செயலாளராக நியமிக்கலாம் என கட்சி தலைமை நினைத்திருக்கும் போது அதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஸ்டாலின் திணறி வருவதாக கூறப்படுகிறது.

இளைஞர்களுக்கு வழிவிட கோரிக்கை

ஆனால் திமுகவில் 60 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு பதவி கொடுப்பதை காட்டிலும் இளம் வயதினருக்கு பதவியை கொடுத்து எதிர்கால தலைமுறையினருக்கு சீனியர்கள் வழி விடலாம் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. இதன் மூலம் திமுக முதியோர் கட்சி என அழைக்கப்படாமல் இளைஞர்கள் நிறைந்த கட்சி என என்ற நம்பிக்கை தமிழ்நாட்டில் உள்ள இளம் வயதினர் மத்தியில் ஏற்படும். இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...