விதிகளை மதிக்காத மேயர், கவுன்சிலர்கள்.. தமிழ்நாட்டில் கலைக்கப்படும் உள்ளாட்சி நிர்வாகம்!

சென்னையைப் போல தமிழ்நாட்டில் எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இதுபோன்ற விதிகளை மீறி பதவியில் இருக்கின்றனர் என்பதை கணக்கிடும் பணியும் நடந்து வருகிறது.

G

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
விதிகளை மதிக்காத மேயர், கவுன்சிலர்கள்.. தமிழ்நாட்டில் கலைக்கப்படும் உள்ளாட்சி நிர்வாகம்!

திமுக ஆட்சியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் விதிமீறலில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல்

கடந்த 2022ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சி, நகராட்சி என மொத்தம் 12 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் பதவிகள் நிரப்பப்பட்டன. இப்படியான நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் கவுன்சிலர்கள் பலரும் விதிமீறலில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் இன்னும் 6 மாதங்களில் முடிவடையவுள்ள நிலையில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நடந்தது என்ன?

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி மாமன்ற உறுப்பினர்கள் தாங்கள் பதவியேற்ற 3 மாத காலத்திற்குள் தங்களுடைய மற்றும் குடும்பத்தினரின் சொத்து, வருமானம், கடன் போன்ற விஷயங்களை தாக்கல் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ம் தேதி இந்த விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.

இந்த ஆவணங்கள் மாமன்ற கூட்டங்களில் தாக்கல் செய்யப்பட்டு அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பொது ஆவணமாக மாற்றப்படும். உள்ளாட்சி அமைப்புகளின் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் பொருட்டு இந்த விதியானது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இதனைத் தான் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் 157 கவுன்சிலர்கள் மீறியுள்ளனர். அவர்கள் இதுவரை சொத்து விவரங்களை தாக்கல் செய்யாமல் தட்டிக்கழித்துள்ளனர். இது ஆம் ஆத்மி கட்சியின் மாநில வழக்கறிஞர் அணியை சேர்ந்த சங்கர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் தவெக அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.

விரைவில் தேர்தல் நடத்த முடிவா?

இந்த நிலையில் அரசு விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் மேயர் பிரியாவின் பதவியை பறிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதே நடவடிக்கை கவுன்சிலர்கள் மீது எடுக்க முடியும். நிர்வாகச் சீர்கேடுகள், நிதி முறைகேடுகள் அல்லது சட்ட விதிகளை மீறுதல் போன்றவை கண்டறியப்பட்டால் உள்ளாட்சி அமைப்புகளை கலைப்பதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது.

சென்னையைப் போல தமிழ்நாட்டில் எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இதுபோன்ற விதிகளை மீறி பதவியில் இருக்கின்றனர் என்பதை கணக்கிடும் பணியும் நடந்து வருகிறது.

இப்படியான நிலையில் திமுக ஆட்சியில் சென்னை மேயர் பிரியா விதிகளை மீறியதும், அவையாவும் கண்டுக்கொள்ளாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேளை உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டால் அடுத்த 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.

இல்லாவிட்டால் சிறப்பு தீர்மானம் இயற்றி தள்ளிப்போடவும் முடியும் என்பதால் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...