VS Babu | வெற்றி பெற மட்டுமே நான் தேவை.. திமுக, அதிமுகவை விளாசிய வி.எஸ்.பாபு!

வி.எஸ்.பாபு திமுக, அதிமுக கட்சிகளில் பயணம் செய்தவர். கவுன்சிலர், மண்டல சேர்மன், முந்தைய புரசைவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். தற்போது கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார்.

G

எழுதியவர்

2 மணி நேரத்திற்கு முன்
VS Babu | வெற்றி பெற மட்டுமே நான் தேவை..  திமுக, அதிமுகவை விளாசிய வி.எஸ்.பாபு!

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வெற்றிக்காக மட்டுமே என்னை பயன்படுத்தி கொண்டன என கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மாநிலம் முழுவதும் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினின் தோல்வி மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. அதற்கு காரணமானவர் தவெக சார்பில் போட்டியிட்டு வென்ற வி.எஸ்.பாபு. திமுக, அதிமுக கட்சிகளில் பயணம் செய்தவர். கவுன்சிலர், மண்டல சேர்மன், முந்தைய புரசைவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் திமுக, அதிமுகவில் தன்னுடைய அனுபவம் பற்றி பேசியுள்ளார்.

அதில், “2011ல் புரசைவாக்கம் தொகுதி மறுசீரமைக்கப்பட்டு கொளத்தூர் உருவானது. அப்போது நான் போட்டியிட வேண்டிய இடத்தில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அந்த தருணம் மிக கஷ்டமாக இருந்தது. தலைமையில் இருப்பவர் நிற்கும்போது நான் எதுவும் சொல்லவில்லை .அப்போது ஸ்டாலினிடம் ஒரு அதிகார தோரணை இருந்தது. இருந்தாலும் இந்த தேர்தலில் நீங்கள் வென்றாலும், வெல்லாவிட்டாலும், ஆட்சி அமைத்தாலும் இல்லைன்னாலும் நான் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என பரப்புரையின்போது கூறி விட்டேன்.

மறைந்த கு.க. செல்வம் என்னிடம், ஏன் பாபு இப்படியெல்லாம் பேசுற என கேட்டார். மு.க.ஸ்டாலினோ, நான் விளையாட்டு பேசுவதாக கூறினார். ஆனால் மு.க.ஸ்டாலின் ஜெயித்த ஒரு வாரத்திலேயே நான் உள்ளிட்ட குடும்பத்தினர் 3 பேர் திமுகவில் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்தோம். அதன்பிறகு கொஞ்ச நாள் கழித்து என்னை ஜெயலலிதா அழைத்தார். முதல் 5 ஆண்டுகள் கூப்பிட்டு பார்த்தார். ஆனால் 2016 தேர்தலில் அதிமுக வென்ற பிறகு நான் அதிமுகவில் சேர்ந்தேன்.

எனினும் ஜெயலலிதாவை என்னால் பார்க்க முடியவில்லை. அதற்குள் அவர் இறந்து விட்டார். அதன்பின் சில மாதங்கள் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தேன். இதனிடையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்காக வேலை செய்தேன். அவரும் ஜெயித்து விட்டார். பின்னர் நான் அதிமுகவை திரும்பி கூட பார்க்கவில்லை.

இதற்கிடையில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி என்னை அழைத்தார். நானும் போய் பார்த்தேன். எல்லாரும் என்னை வெற்றிக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி என்னை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார். அதனால் இனி அக்கட்சி செட்டாகாது என நான் தவெகவில் இணைந்து விட்டேன்.

அப்படியாக நான் செங்கோட்டையனை சந்தித்தேன். நாங்கள் 2006 சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.வாக இருந்ததால் இருவருக்கும் பழக்கம் இருந்தது. கட்சியில் சேர்வதற்கு சென்றபோது ல்ல வரவு என வாழ்த்தினார். அதேபோல் ஒரு நண்பர் மூலமாக ஆதவ் அர்ஜூனா பழக்கமானார். என்னை தவெகவில் எடுத்துக் கொண்டு சென்றதில் அவர் முக்கியமானவர். கொளத்தூர் தொகுதியை நான் ஆதவிடம் கேட்டபோது, அவர் விஜயிடம் சென்று சொல்லியுள்ளார். அதற்கு முதலமைச்சர் விஜய் மறுப்பேதும் தெரிவிக்காமல் அவர் விருப்பப்பட்டால் நிற்கட்டும் என நம்பிக்கையுடன் கூறியதாக வி.எஸ்.பாபு தெரிவித்தார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...