AjithKumar | அஜித் தாயார் மறைவு.. நேரில் முதல்வர் விஜய் அஞ்சலி..உடன் சென்ற த்ரிஷா!

முதலமைச்சர் விஜய் வெளியிட்டிருந்த இரங்கல் பதிவில், வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியிருந்தார்.

G

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
AjithKumar | அஜித் தாயார் மறைவு.. நேரில் முதல்வர் விஜய் அஞ்சலி..உடன் சென்ற த்ரிஷா!

நடிகர் அஜித்குமாரின் தாயார் வயது முப்பால் உயிரிழந்த நிலையில் அவரது உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அஜித் தாயார் மறைவு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தாயார் மோகினி தனது 85 வயதில் நேற்று (மே 30) வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அதிகாலையில் தூக்கத்தில் உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி தமிழ் சினிமா பிரபலங்களிடையேயும், அஜித் ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. உடனடியாக சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்கள் பலரும் தங்கள் இரங்கலையும் அஜித் குடும்பத்திற்கு ஆறுதலையும் தெரிவித்தனர்.

அதே சமயம் திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் நேரடியாகவும் அஜித் தாயாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

சென்னை திரும்பிய அஜித்குமார்

இந்த நிலையில் கார் பந்தயம் காரணமாக துபாய் சென்றிருந்த அஜித் இரவு 8 மணியளவில் சென்னை திரும்பினார். முன்னதாக அஜித் குமார், அனுப் குமார், அனில் குமார் ஆகியோர் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில் தங்களது கஷ்டமான இந்த நேரத்தில் உடன் நின்ற அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும், தாயாரின் இறுதி சடங்கை தனிப்பட்ட நிகழ்வாக நடத்த விரும்புவதால் தனியுரிமையை மதித்து நடக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டிருந்த இரங்கல் பதிவில், வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்தார்.

இந்த நிலையில் துபாயிலிருந்து அஜித் சென்னை திரும்பிய நிலையில் முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தாயார் மோகினி மறைவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். சுமார் பத்து நிமிடங்களுக்கும் மேலாக இந்த சந்திப்பு நிகழ்ந்தது. முதலமைச்சர் விஜயுடன் நடிகை த்ரிஷாவும் சென்றிருந்தார். பின்னர் விஜயை அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஒருவரும் வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தனர்.

என்னதான் திரையில் எதிரிகளாக காட்டிக் கொண்டாலும் நிஜத்தில் அஜித்தும், விஜயும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். நண்பனுக்கு ஒரு இழப்பு என்றதும் முதலமைச்சர் விஜய் நேரில் சென்று ஆறுதல் சொன்னதை பலரும் பாராட்டியுள்ளனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...