நம்பி வந்தவர்களுக்கு வாய்ப்பு இல்லையா? .. விஜய் எடுக்கும் முடிவு.. கலக்கத்தில் EX எம்.எல்.ஏ.,க்கள்!

திருச்சி கிழக்கு, மதுராந்தகம், அம்பாசமுத்திரம், தாராபுரம் மற்றும் பெருந்துறை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது. ஆறு மாதம் காலத்திற்குள் இந்த காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதி ஆகும்

G

எழுதியவர்

2 மணி நேரத்திற்கு முன்
நம்பி வந்தவர்களுக்கு வாய்ப்பு இல்லையா? .. விஜய் எடுக்கும் முடிவு.. கலக்கத்தில் EX எம்.எல்.ஏ.,க்கள்!

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாவிய 4 பேருக்கு இடைத்தேர்தலில் மீண்டும் சீட் கிடைக்குமா என்ற விவகாரத்தில் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது.

4 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அவர் பெரும்பான்மை இல்லாமல் தவித்தார். இந்த நிலையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்தது.

இந்த சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் இரு குழுக்களாக பிரிந்து ஒரு குழுவினர் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழக அரசை ஆதரித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு சென்றனர்.

மீண்டும் இடைத்தேர்தலில் வாய்ப்பா?

தாங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுகவில் இருந்து விலக எடப்பாடி பழனிசாமி தான் காரணம் எனவும், அவர் திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முற்பட்டார் எனவும் சரமாரியாக குற்றச்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அதில் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், அம்பாசமுத்திரம், தாராபுரம் மற்றும் பெருந்துறை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது. ஆறு மாதம் காலத்திற்குள் இந்த காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதி ஆகும்

விஜய் எடுக்கப்போகும் முடிவு இதுவா?

திருச்சி கிழக்கு தவிர்த்து மீதமுள்ள 4 தொகுதிகளில் ஏற்கனவே அதிமுகவில் இருந்து போட்டியிட்டவர்களை தமிழக வெற்றிக் கழகம் நிறுத்தும் என பலரும் கணித்து வருகின்றனர். ஆனால் விஜயின் கணக்கு வேறு மாதிரியாக உள்ளது. அதாவது தவெக, திமுக வேண்டாம் என முடிவெடுத்து தான் மக்கள் வாக்களித்து அதிமுக வேட்பாளர்களை இந்த தேர்தலில் வெற்றி பெற வைத்துள்ளனர்.

அப்படியிருக்கும் அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்ததால் அந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதை விஜய் அறிந்துள்ளார். இதனால் மீண்டும் அவர்களை நிறுத்தினால் சரிவு ஏற்பட்டால் என்ன செய்வது என யோசனை செய்து வருகிறார். இதனால் அம்பாசமுத்திரம் தொகுதியில் ராஜினாமா செய்த இசக்கி சுப்பையாவை தவிர்த்து மற்ற மூவருக்கும் ஏதேனும் வாரிய தலைவர் பதவியை வழங்கிவிட்டு அந்த இடத்தில் புதிய வேட்பாளரை களம் இறக்கலாமா என விஜய் ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

தவெகவில் புதியவர்களுக்கு வாய்ப்பு

அதேபோல் திருச்சி கிழக்கில் யார் போட்டியிடப் போகிறார் என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த லிஸ்டில் கு.ப.கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி, நடிகர் ராகவா லாரன்ஸ், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், தவெகவின் லயோலா மணி ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. நிச்சயம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் போட்டியிட முன்வாரது என்ற நிலையில் 5 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளரை விஜய் நிறுத்துவாரா அல்லது மாற்றுக்கட்சியினருக்கு வாய்ப்பு வழங்கும் முடிவுக்கு வருவாரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்து விடும்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...