Seeman | ‘வட்ட வட்ட பாறையிலே’ ... அண்ணாமலை வருகையால் விழிபிதுங்கும் சீமான்!

விஜயால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில் தற்போது அண்ணாமலையின் வருகை சீமானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

G

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
Seeman | ‘வட்ட வட்ட பாறையிலே’ ... அண்ணாமலை வருகையால் விழிபிதுங்கும் சீமான்!

தமிழக அரசியலில் புதிய வரவாக அண்ணாமலை விரைவில் கட்சி தொடங்க உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இணைவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2026 சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட முடியவில்லை. அதற்குள் தமிழகத்தில் புதிய கட்சி ஒன்று உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை அந்த கட்சியில் இருந்து விலகி தற்போது அரசியல் இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளதாகவும், விரைவில் அதனை கட்சியாக மாற்றுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் இந்த கட்சி தொடங்கும் முடிவு இளைஞர்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது. குறிப்பாக அவருக்கென தனி ரசிகர் மற்றும் ஆதரவு பட்டாளம் அரசியலில் இருக்கும் நிலையில் எங்கு சென்றாலும் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. பேச்சிலும் செயல்பாட்டிலும் ஆக்ரோஷமாக செயல்படும் அண்ணாமலையின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய புயலை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே திமுக, அதிமுக என இரு கட்சிகள் தமிழகத்தை ஆண்டு வந்ததை தடுத்து இந்த தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்து ஒரு மாற்றத்தை தமிழ்நாட்டில் உருவாக்கியுள்ளது. இதில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு அதன் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், திமுகவில் அடுத்த தலைமை உதயநிதி ஸ்டாலினை நோக்கி நகர தொடங்கியுள்ளது.

இதற்கிடையில் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நாம் தமிழர் கட்சிக்கு விஜயின் வருகையால் இந்த தேர்தலில் பெரும் அடி விழுந்தது. அக்கட்சியின் வாக்கு சதவீதம் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில் தற்போது அண்ணாமலையின் வருகை சீமானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. தமிழ் தேசியத்தை மையப்படுத்தி செயல்பட்டு வரும் நாம் தமிழர் கட்சி இளைஞர்களிடையே மிகப்பெரிய ஆதரவை பெற்றிருந்தது. கடந்த காலங்களில் பெரும்பாலான இளைஞர்களின் ஓட்டுகளை சீமான் பெற்றிருந்தார். ஆனால் தற்போது விஜய், அண்ணாமலை ஆகியோரின் வருகை நாம் தமிழர் கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஆனால் நாம் தமிழர் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வியை கழுவி இருந்தாலும் அதனை பற்றி கவலைப்படாமல் என்றாவது ஒருநாள் தாங்கள் வென்று விடுவோம் என்ற நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக தேர்தல் களத்திலும் அரசியல் களத்திலும் செயல்பட்டு வருகிறது. அப்படி இருக்கும்போது அண்ணாமலையின் வருகை சீமானுக்கு எந்தவித நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை என நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இனி காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...