Minister Keerthana | ட்ரோல் செய்யப்பட்ட கீர்த்தனா.. ஆந்திராவில் இருந்து வந்த சப்போர்ட்!

சில தினங்களுக்கு முன்பு தொழில்துறை முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும் என, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வலியுறுத்தி பல நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை அமைச்சர் கீர்த்தனா உருவாக்கியிருந்தார்.

G

எழுதியவர்

1 நாட்களுக்கு முன்
Minister Keerthana | ட்ரோல் செய்யப்பட்ட கீர்த்தனா.. ஆந்திராவில் இருந்து வந்த சப்போர்ட்!

தமிழ்நாட்டிற்கும் முதலீடுகள் தேவை என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட வீடியோ கடுமையான விமர்சனத்திற்குள்ளான நிலையில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், அமைச்சருமான நாரா லோகேஷ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவரது அமைச்சரவையில் 30 தவெக அமைச்சர்களும், 2 இடங்களில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தலா ஒரு அமைச்சரவை பதவியையும் பெற்றுள்ளது.

கிண்டலுக்கு உள்ளான வீடியோ l

இந்த நிலையில் தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சராக விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 29 வயதான கீர்த்தனா பொறுப்பேற்றுள்ளார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் சரளமாக பேசும் இவர் சில தினங்களுக்கு முன்பு தொழில்துறை முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும் என, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வலியுறுத்தி பல நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை உருவாக்கியிருந்தார். இந்த வீடியோ கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தவெக அரசு ரியல் அரசாக இல்லாமல் ரீல்ஸ் அரசாக செயல்படுவதாக எதிர் கட்சிகள் சரமாரியாக குற்றம் சாட்டினர்.

தமிழ்நாடு எதிர்காலத்திற்காக காத்திருக்கவில்லை

அமைச்சர் கீர்த்தனா இந்த வீடியோவை தனது சமூக வலைதளம் பக்கத்தில் பதிவிட்டு அதில், "தமிழ்நாடு எதிர்காலத்திற்காகக் காத்திருக்கவில்லை; நாங்களே அதை வடிவமைத்து வருகிறோம்.

ஒற்றைச் சாளர ஒப்புதல்கள் மற்றும் விரைவான அனுமதிகள் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) நகரங்கள், பசுமை ஹைட்ரஜன், மேம்பட்ட உற்பத்தித் துறைகள் மற்றும் விண்வெளிப் பொருளாதாரம் வரை புதுமைகள் செயல்வடிவம் பெறும் ஒரு சூழலமைப்பைத் தமிழ்நாடு உருவாக்கி வருகிறது.முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தொலைநோக்குமிக்க தலைமையின் கீழ், தமிழ்நாட்டை இந்தியாவின் முதலீடு மற்றும் புதுமைகளின் மையமாகத் திகழச் செய்ய நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.எதிர்காலம் இங்கேயே உள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்" என தெரிவித்திருந்தார்.

ஆந்திராவின் அமைச்சர் ஆதரவு

பலரும் கீர்த்தனாவை விமர்சித்து வரும் நிலையில் ஆந்திர மாநில அமைச்சரான நாரா லோகேஷ் ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எக்ஸ் வலைதள பக்கத்தில், கீர்த்தனா அவர்களே, முதலீட்டாளர்களை நீங்கள் முன்முயற்சியுடன் அணுகுவதைப் பாராட்டுகிறேன். இன்று ஒவ்வொரு தொழில்துறை அமைச்சரும் தங்கள் மாநிலத்தை தீவிரமாக சந்தைப்படுத்த வேண்டும், முதலீட்டாளர்களுடன் கலந்துரையாட வேண்டும், மேலும் வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களிடையே நம்பிக்கையை வளர்க்க வேண்டும். பிரதமர் நரேந்திரமோடி அவர்களே, மாநிலங்கள் முன்முயற்சியுடன் செயல்பட்டு இந்தியாவின் வளர்ச்சிச் சுழற்சியை விரைவுபடுத்த வேண்டும் என்று பலமுறை ஊக்குவித்துள்ளார்.

ஆந்திரபிரதேசம், நிச்சயமாக, தமிழகத்திற்கு ஆரோக்கியமான போட்டியை வழங்கும். மேலும், தேவையற்ற சத்தங்களைப் புறக்கணியுங்கள் - ட்ரோல்கள் வேலைகளை உருவாக்குவதில்லை. முதலீடுகள்தான் உருவாக்குகின்றன" என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...