CM Vijay | இளைஞர்களின் எதிர்காலம்.. விஜய் ஆண்டால் என்ன தவறு? - சிவகுமார் பதிலடி!

திமுக, அதிமுக தான் 59 ஆண்டுகள் இந்த தமிழ்நாட்டை ஆட்சி செய்துள்ளது. அதுவும் பிடிக்காமல் தான் இன்றைக்கு விஜய்க்கு வாக்கை செலுத்தி உள்ளார்கள் என நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

G

எழுதியவர்

1 நாட்களுக்கு முன்
CM Vijay | இளைஞர்களின் எதிர்காலம்.. விஜய் ஆண்டால் என்ன தவறு? - சிவகுமார் பதிலடி!

முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் தமிழ்நாட்டிற்கு நிச்சயம் நல்லது செய்வார் என நம்ப வேண்டும் என்ற நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜயும் தமிழக வெற்றிக் கழகம் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. விஜய் முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ள வகையில் அரசியல் அனுபவம் இல்லாமல் சினிமா கவர்ச்சி மூலம் மக்களை கவர்ந்து இழுத்து அவர் ஆட்சிக்கு வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் நடிகர் சிவகுமாரிடம் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

விஜய் வந்தால் சந்தோஷப்பட வேண்டியது தான். மாற்றம் வேண்டும் என்று நினைத்து தான் மக்கள் ஓட்டு போட்டு உள்ளார்கள். இந்த உலகில் மாற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. 1954 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டை ஆண்ட காமராசர் இறக்கும் போது ரூ.140 பணம், 4 ஜோடி உடை, 2 ஜோடி செருப்பு, 5 புத்தகம் மட்டுமே வைத்திருந்தார். அப்படிப்பட்ட காமராஜரை ஏன் இந்த மக்கள் தோற்கடித்தார்கள்?.. மாற்றம் வேண்டும் என்பதால் தான் அப்படி நடந்தது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும் விஷக் கிருமிகள் பரவ தொடங்கி விட்டதாக அப்போதைய முதல்வர் பக்தவச்சலம் தெரிவித்தார். அவர் எதற்கு அப்படி சொல்ல வேண்டும்?.. அத்தகைய திமுக, அதிமுக தான் 59 ஆண்டுகள் இந்த தமிழ்நாட்டை ஆட்சி செய்துள்ளது. அதுவும் பிடிக்காமல் தான் இன்று மக்கள் விஜய்க்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். அதனால் யார் வேண்டும் என்று மக்கள் தான் முடிவு செய்கிறார்கள். மக்கள் தான் நீதிபதிகள். மக்கள் முடிவை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கிட்டத்தட்ட 90 சதவீதம் இளம் வாப்பாளர்கள், முதல் முறை வாக்காளர்கள் பணம் வாங்காமல் வாக்களித்துள்ளார்கள். பெண்களும் விஜய்க்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். என்னுடைய பேரன் கூட விஜய்க்கு தான் ஓட்டு போடணும். நாளைய தலைமுறை அவர்கள் தான். அவர்கள் தங்களுக்கான தலைவரை தேர்வு செய்தது என்ன தவறு இருக்கின்றது?. விஜய் நல்லது செய்வார் என நம்புவோம்.

சுதந்திரத்திற்கு பின்னர் மக்கள் சினிமாவோட மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். திரையில் அவர்களுக்கு நெருக்கமாக காட்டப்படும் முகங்களுடன் பரீட்சையம் பெற்றனர். அந்த வகையில் அண்ணா தொடங்கி கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், இன்றைக்கு விஜய் வரை அரசியலில் வெற்றி பெற்றுள்ளார்கள் என நடிகர் சிவகுமார் கூறினார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...