ஆண்கள் ஸ்கீட் பிரிவு தகுதிச்சுற்று இரண்டாவது நாள் போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் இந்திய அணியில் இருந்து பங்கேற்ற எந்த வீரரும் முதல் எட்டு இடங்களுக்குள் முன்னேறாததால், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு கைமாறியது.
தகுதிச்சுற்று முடிவில், மராஜ் அகமது கான் 18வது இடத்தையும், ஆனந்த் சித் சிங் நருவா 38வது இடத்தையும், குர்ஜோத் சிங் கங்குரா 54வது இடத்தையும் பெற்றனர்.
ரேங்கிங் புள்ளிக்காக மட்டும் பங்கேற்ற வீரர்களில், பவ்தேக் சிங் கில் 19வது இடத்தையும், அபைசிங் செகோன் 71வது இடத்தையும் பிடித்தனர்.
பெண்கள் ஸ்கீட் பிரிவிலும் இந்திய அணிக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. ரைசா தில்லான் 17வது இடம், பரினாஸ் தலிவால் 32வது இடம், கனேமத் சிக்கோன் 33வது இடம் பெற்றனர். இதனால் அவர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.
மொத்தத்தில், இப்போட்டியில் இந்திய அணிக்கு எதிர்பார்த்த அளவிலான முன்னேற்றம் கிடைக்காதது குறிப்பிடத்தக்கது.
