சொந்த மண்ணில் ஹைதெராபாத் அணி அபார வெற்றி

சொந்த மண்ணில் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிப் பெற்றது

1 மாதங்களுக்கு முன்
சொந்த மண்ணில்  ஹைதெராபாத் அணி அபார வெற்றி

ஐபிஎல் 2026 தொடரின் 27வது லீக் போட்டியில், சொந்த மண்ணில் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பாக தோற்கடித்தது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

அபிஷேக் ஷர்மாவின் அதிரடி தொடக்கம்

இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்காக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் தொடக்க வீரர்களாக இறங்கினர். அபிஷேக் ஷர்மா ஆரம்பத்திலேயே அதிரடி காட்டி, 15 பந்துகளில் அரைசதம் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவர் 22 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் டிராவிஸ் ஹெட் மற்றும் இஷான் கிஷன் விரைவில் அவுட்டாக, ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்தது ஹைதராபாத். பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தாலும், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது.

சிஎஸ்கே போராட்டம் வீண்

195 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியில், மேட் சார்ட் 34 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 30 ரன்கள், சர்பராஸ் கான் 25 ரன்கள் எடுத்தனர். சஞ்சு சாம்சன் 7 ரன்களில் அவுட்டானது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

இறுதி வரை கடுமையாக போராடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் மட்டுமே எடுத்து முடித்தது.

இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று, சொந்த மண்ணில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.

இன்றைய போட்டி

இன்றைய ஐபிஎல் தொடரில் இரு முக்கியமான போட்டிகள் நடைபெற உள்ளன.

முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதற்காக கடும் போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, இரவு நடைபெறும் மற்றொரு போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி சண்டிகரில் நடைபெற இருப்பதால், ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகம் நிலவுகிறது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...