ஒரே நேரத்தில் இரண்டு இந்திய அணிகள்? – பிசிசிஐ-ன் புதிய அணித் திட்டம்

சர்வதேச கிரிக்கெட் அட்டவணை நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், பிசிசிஐ(BCCI) ஒரே நேரத்தில் இரண்டு இந்திய அணிகளை களமிறக்குவதற்கான முக்கிய திட்டத்தை ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 மாதங்களுக்கு முன்
ஒரே நேரத்தில் இரண்டு இந்திய அணிகள்? – பிசிசிஐ-ன்  புதிய அணித் திட்டம்

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய போட்டிகள் நடைபெறும் அதே காலகட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடர் நடைபெற உள்ளது. இதனால் ஒரே அணியை வைத்து அனைத்து தொடர்களையும் சமாளிப்பது கடினமாக இருப்பதால், இரண்டு தனித்தனி இந்திய அணிகளை உருவாக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இளம் வீரர்கள்

இந்தியாவில் கிரிக்கெட் திறமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஐபிஎல் மூலம் பல இளம் வீரர்கள் சர்வதேச தரத்திற்கு உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வளத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் பிசிசிஐ இந்த முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளது.

ஷ்ரேயஸ் ஐயர் தலைமை

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அனுபவம் வாய்ந்த ஷ்ரேயஸ் ஐயர் ஒரு அணிக்கு தலைமை தாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் வகையில் அவரின் அனுபவம் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த அணியில் வைபவ் சூர்யவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் , பிரியான்ஷ் ஆர்யா, அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரஜத் பாடிட , ஆயுஷ் பதோனி, ஷஷாங் சிங், அனுகுல் ராய் உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

இந்த புதிய அணித் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால், இந்திய கிரிக்கெட் ஒரே அணியை மட்டுமே சார்ந்திருக்காமல், எந்த நேரத்திலும் இரண்டு அல்லது மூன்று வலுவான அணிகளை உருவாக்கும் திறனை பெறும். இது உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியாவின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...