மொனாக்கோவில் நடைபெற்று வரும் மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
இத்தாலியின் நட்சத்திர வீரர் ஜானிக் சின்னர், காலிறுதியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம்-ஐ (Felix Auger-Aliassime) எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அரையிறுதியில் அவர் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ்-ஐ எதிர்கொள்ள உள்ளார்.
மற்றொரு காலிறுதிப் போட்டியில், ஸ்பெயினின் இளம் வீரர் கார்லோஸ் அல்காரஸ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்-உடன் மோதினார். இதில் முழு ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
முன்னணி வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதால், மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் தொடரின் அடுத்தடுத்த போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
