ஐபிஎல் தொடரில்,மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள், மும்பையின் வான்கடே மைதானத்தில் நேற்று மோதின. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்தது. 55 பந்துகளில் ரையான் ரிக்கல்டனின் அதிரடி சதத்தால் (123 ரன்கள்) மும்பை அணி இந்த பெரிய ஸ்கோர்- ஐ பதிவு செய்தது. தொடர்ந்து களம் இறங்கிய வில் ஜாக்ஸ் 46 ரன்கள், ஹார்திக் பாண்ட்யா 31 ரன்கள் எடுத்து அணிக்கு வலுசேர்த்தனர்.
பின்னர் 244 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அணிக்கு வலுவான தொடக்கம் அளித்தார். ஹெய்ன்ரிச் கிளாசன் 65 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றார். அபிஷேக் சர்மா 45 ரன்கள், அனிகேத் வர்மா 30 ரன்கள் (ஆட்டமிழக்காமல்) பங்களித்தனர்.
பந்துவீச்சில் மும்பை அணியின் ட்ரெண்ட் போல்ட், அல்லா கஜன்ஃபர் மற்றும் ஹார்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இருப்பினும், ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்டிங்கை கட்டுப்படுத்த முடியவில்லை.
மேலும் இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிராக 200-க்கும் மேற்பட்ட ரன்களில் வென்ற 2-வது அணி என்ற பெருமையை ஹைதராபாத் பெற்றது.
