மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சபலேங்கா, ஸ்வியாட்டெக் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

1 மாதங்களுக்கு முன்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சபலேங்கா, ஸ்வியாட்டெக் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

போலாந்த் நாட்டை சேர்ந்த முன்னாள் சாம்பியன் இகா ஸ்வியாட்டெக் , தகுதிச்சுற்றில் இருந்து வந்த உக்ரைன் நாட்டை சேர்ந்த டாரியா ஸ்னிகூர் மீது 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார். இந்த போட்டி வெறும் 61 நிமிடங்களில் முடிந்தது.

உலக நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸ் நாட்டை சேர்ந்த அரினா சபலேங்கா, அமெரிக்காவின் பேய்டன் ஸ்டெர்ன்ஸ் மீது 7-5, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதையடுத்து இத்தாலி நாட்டை சேர்ந்த ஜாஸ்மின் பாவோலினி, உக்ரைன் நாட்டின் கலினினா, ரஷ்யாவின் டியானா ஷ்னைடர், ஜப்பானின் நயோமி ஒசாகா , சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக் ஆகியோரும் தங்களது போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

இந்நிலையில், 7வது சீட் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, ஹங்கேரியின் அன்னா பொன்டார் எதிராக 3-6, 4-6 என்ற நேரடி செட்களில் தோல்வியடைந்து அதிர்ச்சி வெளியேற்றத்தை சந்தித்தார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...