உலக சாம்பியன் குகேஷின் அதிரடி வெற்றி

உஸ்பெகிஸ்தான் வீரர் ஜாவோகிர் சிந்தாரோவை 52ஆவது நகர்த்தலில் வீழ்த்தினார்

1 நாட்களுக்கு முன்
உலக சாம்பியன் குகேஷின் அதிரடி வெற்றி

போலந்தின் வார்சா நகரில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ் டூர் தொடரின் சூப்பர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் அபாரமான வெற்றியை பதிவு செய்துள்ளார்.

தொடரின் ஐந்தாவது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் ஜவோகிர் சிந்தாரோவ்-ஐ 52ஆவது நகர்த்தலில் வீழ்த்தினார்.

இந்த வெற்றி மூலம் குகேஷ் 5.0 புள்ளிகளுடன் ரேபிட் பிரிவின் தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மறுபுறம், ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் போட்டியில் சிறப்பாக விளையாடிய சிந்தாரோவ், இந்த தோல்வியால் 4.0 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு சரிந்தார்.

குறிப்பாக, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் தொடரில் குகேஷ் மற்றும் சிந்தாரோவ் மோத உள்ள நிலையில், இந்த வெற்றி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. எதிர்பார்க்கப்பட்ட போட்டிக்கு முன்பாக குகேஷ் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியதாக சதுரங்க வட்டாரங்கள் மதிப்பிட்டுள்ளன.

சூப்பர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் தொடரின் மீதமுள்ள சுற்றுகளிலும் குகேஷ் தனது வெற்றிப் பயணத்தை தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...