கோல் ஏதுமின்றி முடிந்த ஈஸ்ட் பெங்கால் – பஞ்சாப் எஃப்சி மோதல்

ஈஸ்ட் பெங்கால் எஃப்சி மற்றும் பஞ்சாப் எஃப்சி அணிகளுக்கு இடையிலான போட்டி கோலின்றி டிராவில் முடிந்தது

2 மணி நேரத்திற்கு முன்
கோல் ஏதுமின்றி முடிந்த ஈஸ்ட் பெங்கால் – பஞ்சாப் எஃப்சி மோதல்

12வது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி மற்றும் பஞ்சாப் எஃப்சி அணிகளுக்கு இடையிலான போட்டி கோலின்றி டிராவில் முடிந்தது.

14 அணிகள் பங்கேற்றுள்ள இந்த ஆண்டுக்கான ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சொந்த மைதான அணியான ஈஸ்ட் பெங்கால் FC, பஞ்சாப் FC அணியை எதிர்கொண்டது.

போட்டி தொடங்கிய முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. முதல் பாதியில் இரு அணிகளுக்கும் சில முக்கியமான கோல் வாய்ப்புகள் கிடைத்த போதிலும், அவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்து இரண்டாம் பாதியிலும் ஆட்டம் வேகமாக நடைபெற்றது.

ஆயினும், ஆட்ட நேர முடிவில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி மற்றும் பஞ்சாப் எஃப்சி அணிகள் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன.

இந்த டிராவின் மூலம் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டன. தொடரின் அடுத்த கட்டப் போட்டிகளில் வெற்றி பெறும் நோக்கில் இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...