12வது ஐஎஸ்எல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 14 அணிகள் கலந்து கொண்ட அந்த தொடரின் ஒரு பகுதியாக, புவனேஸ்வரியில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஒடிசா எஃப்சி மற்றும் பெங்களூரு எஃப்சி அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஒடிசா அணிக்காக ரஹீம் அலி 34வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார். அதற்கு பதிலளித்த பெங்களூரு அணியின் பிரையன், 48வது நிமிடத்தில் சமன்செய்யும் கோலை அடித்தார்.
இரு அணிகளும் தொடர்ந்து கோல் அடிக்க முயன்றபோதிலும், மேலும் எந்த கோலும் பதிவு செய்யப்படவில்லை. இதனால், ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவாக நிறைவடைந்தது.
இந்நிலையில், பெங்களூரு அணி 11 வது ஆட்டத்தில் 5 டிரா- வுடன் 17 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது. மேலும் ஒடிசா அணி 10 ஆட்டங்களில் 4 டிரா-வுடன் 7 புள்ளிகளுடன் 13 வது இடத்தில் உள்ளது.
இன்றைய ஆட்டத்தில், மும்பை சிட்டி எப்சி மற்றும் ஈஸ்ட் பெங்கால் எப்சி அணிகள் மோதவுள்ளன.
