சாம்சன் அதிரடி - டெல்லி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!

சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணியை எளிதாக வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

3 மணி நேரத்திற்கு முன்
சாம்சன் அதிரடி - டெல்லி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வேற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

​டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங்:

​முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இம்பாக்ட் பிளேயராக களம் இறங்கிய சமீர் ரிஸ்வி 24 பந்துகளில் 40 ரன்களும் (4 சிக்ஸர்கள்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியின் பந்துவீச்சில் நூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

​சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி:

​156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணிக்கு, விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாம்சன் 52 பந்துகளில் 87 ரன்கள் (7 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) விளாசி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்குத் துணையாக கார்த்திக் சர்மா 41 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார்.

இந்நிலையில் ​சென்னை அணி 17.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்து, 15 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை உறுதி செய்தது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...